10 ஒருமுறையாவது இந்தியாவில் புனிதப்பயணம் செல்வது மிகவும்

Prachi Joshi

Last updated: Nov 29, 2017

ஆன்மீக உள்ளொளியைத் தேடி உலகெங்கிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். இயல்பிலேயே, இவற்றுள் பெரும்பான்மையான திருத்தலங்கள் இயற்கை எழில் சூழ்ந்த தனித்துவமான இடங்களில் தொலைவில் அமைந்திருக்கின்றன. கோயில்களுக்கும் திருயாத்திரைகளுக்கும் பெயர்பெற்ற இந்த இந்தியத் திருநாட்டில் நாங்கள் 10 திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

 

சீரடி

shirdi
Image Courtesy: Shri Sai Baba Sansthan Official Website

 

மகாராஷ்டிராவில் உள்ள புனித நகரமான சீரடி, சாய் பாபாவின் திருத்தலமாகும். எல்லா சமயங்களிலும் இவரைப் பின்பற்றுபவர்களும் வணங்குபவர்களும் உள்ளனர். பல அற்புதங்களையும் செய்தவர் இவர். ஆண்டு முழுவதும் பக்தர்கள் அவருடைய புனித தலத்தில் குவிகின்றனர். இங்கு ராமநவமி, குரு பூர்ணிமா மற்றும் விஜயதசமி ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்றவை.

Book Your Pilgrimage to Shirdi Here

திருப்பதி

இந்தியாவில் உள்ள மிகவும் புனித தலங்களுள் திருப்பதி அருகில் உள்ள திருமலை வெங்கடேஷ்வரர் கோயிலும் ஒன்று. விஷ்ணு கடவுளின் அவதாரமான சுவாமி வெங்கடேஷ்வரர் இந்தக் கோயிலில் இருந்து அருள் வழங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பரமோத்சவ விழாவின்போது பக்தர்கள் இங்கு குவிகின்றனர்.

Book Your Pilgrimage to Tirupati Here

இராமேஸ்வரம்

rameswaram

இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க புனித தலங்களுள் ஒன்றாக உள்ளது. இது சார் தாமில் ஒரு அங்கமாகவும் உள்ளது. பாம்பன் தீவில் அமைந்துள்ள இந்த ஆலயம், இந்திய பிரதான பகுதியோடு ஒரு நீண்ட பாலத்தினால் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்மீகவாதியோ இல்லையோ ஆனால், பார்க்க வேண்டிய இடங்களுள் இராமேஸ்வரமும் ஒன்று. இங்கு மகாசிவராத்திரியும் நவராத்திரியும் குறிப்பாக பிரபலமான விழாக்களாகும்.

Book Your Pilgrimage to Rameswaram Here

சோம்நாத் மற்றும் துவாரகா

ஓங்கி உயர்ந்து நிற்கும் கடலோர ஆலயங்களான துவாரகா மற்றும் சோம்நாத் ஆலயங்கள் உண்மையிலேயே அனைவருக்கும் வியப்பளிப்பளிப்பவை. துவாரகா என்பது சார் தாம் புனித தலங்களுள் ஒன்றாக உள்ளது. கிருஷ்ணர் வீற்றிருக்கும் துவர்கதீஷ் ஆலயம் அறியப்படும் ஜகத் மந்திர் இங்குதான் உள்ளது. இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க புனித தலங்களுள் ஒன்றாக சோம்நாத் ஆலயம் உள்ளது.

Book Your Pilgrimage to Somnath and Dwarka Here

வைஷ்ணவ தேவி

ஜம்முவில் கத்ரா அருகில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் இந்தியாவில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான புனித இடங்களுள் ஒன்றாகும். இந்த ஆலயம் 5,300 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த புனித தலத்தை அடைய கஷ்டப்பட்டு மலையில் ஏற வேண்டும். இது சக்தி தேவியின் ஆலயமாகும். இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று. நவராத்திரி விழாதான் இங்கு கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாகும்.

Book Your Pilgrimage to Vaishno Devi Here

புரி

ஒடிசாவில் உள்ள புரியில் கடற்கரை நகரில் அமைந்துள்ளதுதான் பிரசித்தி பெற்ற ஜகநாதர் ஆலயம். ஜகநாத சுவாமியின் இந்த ஆலயத்தின் ரத யாத்திரை சமயத்தில் உலகெங்கிலுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். ஆலயத்திலிருந்து தெய்வங்கள் எல்லாம் கடலுக்கு நீராடச் செல்லும் பயணத்தை எல்லாரும் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

Book Your Pilgrimage to Puri Here

அம்ரித்சர்

amritsar

நீரில் பிரதிபலிக்கும் மினுமினுக்கும் தங்கத் தகடு பதித்த பொற்கோவிலின் தோற்றம், கிரந்த சாகிப் குருக்களால் வாசிக்கப்படும் இதமான குரலிசை, ரம்மியமான சூழல் என்று நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் அம்ரித்சரில் உள்ள பொற்கோவிலுக்கு (ஹர்மிந்தர் சாஹிப்) கட்டாயமாக ஒருமுறையாவது செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களுக்கு நாள் முழுவதும் உணவு அளிக்கும் இந்த இடத்தில் உணவு உண்ண மறக்காதீர்கள். இங்கு கொண்டாடப்படும் குரு நானக் ஜெயந்தி மற்றும் பைசாகி விழாக்கள் பக்தி சிரப்பு மிக்கவை.

அம்ரித்சருக்கு உங்கள் புனித யாத்திரையை இங்கே பதிவு செய்யுங்கள்

அஜ்மீர்

பாலிவுட் பிரபலங்கள் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெளிவிடுவதற்கு முன்னர் வந்து வணங்கும் இடமாக அஜ்மீரில் மொய்னுதீன் கிஸ்தி என்ற சூஃபி புனித தலமான தர்கா ஷரிஃப் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக போர்வைகளை காணிக்கையாக வழங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சூஃபி குருவின் நினைவாகக் கொண்டாடப்படும் ஊர்ஸ் விழா மிகவும் பிரபலமானது.

அஜ்மீருக்கு உங்கள் புனித யாத்திரையை இங்கே பதிவு செய்யுங்கள்

கூடுதலாக வாசித்து அறிந்துகொள்ள: 2017-18-யில் ராஜஸ்தானின் விழாக்களும் கொண்டாட்டங்களும்.

மதுரா

கிருஷணரின் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவும் அருகிலுள்ள பிருந்தாவனமும் நீல வண்ண குறும்புமிக்க கடவுளின் கோயில்கள் அதிகம் உள்ள இடமாகும். இங்குள்ள கேஷவ் தேவ் ஆலயமும் பங்கி பிஹாரி கோயிலும் மிக முக்கியமான புனித ஆலயங்களாகும். ஜன்மாஷ்டமியும் ஹோலி பண்டிகையும் மதுராவில் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களாகும்.

வாரணாசி

varanasi

மிகவும் பழமையான வாரணாசி புனித தலமாகக் கருதப்படுகிறது. கங்கை நதியின் கரைகளில் பல கோயில்கள் அமைந்துள்ளன. காசி விசுவநாதர் ஆலயத்திற்கும் சங்கத் மோச்சன் ஆலயத்திற்கும் இந்த நகரில் அதிகமானோர் வந்து வழிபடும் இடங்களாக உள்ளன. இந்தியாவின் பண்பாட்டு மரபைப் பரைசாற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கங்கா மகோத்சவா கொண்டாடப்படுகிறது.

Here listed are all pilgrimage packages, book now!