இந்திய குளிர்காலங்களின் சிறந்த அனுபவத்தைப் பெறுங்கள். சில்லென்று உணருங்கள்!

Pallavi Siddhanta

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

வெப்பமான வெளிச்சமான கோடை காலங்கள் எல்லாம் கொடூரமானவை, வியர்த்துக் கொட்டுபவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குளிர்காலத்தில் மலைப்பகுதி மலரைப் போன்று பிரகாசமாகவும் சந்தோஷமாகவும் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த 8 குளிர்கால அனுபவங்களை வாழ்நாள் காலத்தில் ஒரு முறையாவது நீங்கள் அனுபவிக்க வேண்டும். உங்களது ஆன்மா குளிரை விரும்பி குளிரில் சுற்றி அலைய விரும்பினால் அதற்கு இந்திய குளிர்காலம் அளிக்கும் சிறந்த தேர்வுகள் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

1. ரூப்குண்ட் ஸ்கெலிடன் ஏரிக்கு மலையேறச் செல்லவும். 

Roopkund Skeleton Lake, places to visit in winter in india
Flickr Creative Commons/ Abhijeet Rane

இயற்கை மீறிய அமானுஷ்ய சக்தியின் ஆற்றலுடன் தனித்துவமான வெள்ளை குளிர்காலத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும்? பெரும் மலைத்தொடரான இமாலயத்தின் பனிப்பகுதிக்கு மேலே உள்ள சிறிய ஏரியே ரூப்கண்ட். இது ஒரு பெரிய புல்வெளியின் மத்தியில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி திரிசூல் மற்றும் நந்த குன்டி என்ற இரண்டு சிகரங்கள் உள்ளன. இது உங்களுக்கு கூடுதல் அனுபவத்தை அளிக்கும். இந்த ஏரியின் ஓரத்தில் மனித எலும்புக்கூடுகளின் மிச்சங்கள் உள்ளன. இது இந்த குளிர்கால சொர்க்கத்திற்கு ஒரு அமானுஷ்யமான ஒளிவட்டத்தை அளிக்கின்றது. ரூப்கண்ட் ஏரியின் பிரபலத்திற்கு இதுவும் ஒரு காரணம். இந்த எலும்புக்கூடுகளின் தோற்றம் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்தப் பனியில் தொலைந்த ஈரானிய பயணிகளின் மிச்சம் இது என்று சிலர் கூறுகிறார்கள். இவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சோதித்த விஞ்ஞானிகள் மகாராஷ்டிராவின் சித்பவன் பிராமணர்களுடைய எலும்புக்கூடுகள் இவை என்று கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள பயணிகளை இது ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது. இங்கு மலையேறுவது உண்மையிலேயே சவாலுக்குரிய விஷயம்தான்.

தெரிந்துகொள்வது நல்லது:

நீங்கள் மலையேறும் முன்பே அதற்குத் தேவையான குளிர்கால கம்பளி ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள். குளிருடன் போராட பல்வேறு ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு விளக்கையும் (லைட்) கையோடு எடுத்துச்செல்லுங்கள். கடினமான சுமையை மலையில் சுமந்து செல்வதென்பது விளையாட்டல்ல. நல்ல சமநிலையை அளிக்கும் முதுகுப்பை, மலையேறுவதற்கு வசதியான ஷூக்கள் ஆகியவை கண்டிப்பாகத் தேவை. செருப்பு கடியிலிருந்து தப்பிக்க ஏற்கனவே பழகிய ஷூக்களை எடுத்துவரவும்.

உயரம்: 5,029 மீட்டர்கள் (16,499 அடி)

நாட்களின் எண்ணிக்கை:  6-7, உங்களது உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது

அடிவார கிராமம்: லொகாஜூங்

எவ்வாறு செல்வது: லோகாஜங் >டிடினா > பெடினி புக்யல்> பாக்வாபாசா > ரூப்குண்ட் > பட்டர் நௌச்சனி > வான் > லோகாஜங்

2. பாரத்பூர் பறவை சரணாலயத்தில் பறவைகளை நோக்குவது

Bharatpur bird sanctuary, places to visit in winter in india

பாரத்பூர் பறவை சரணாலயம் என்று முன்பு அறியப்பட்ட கியாலாடியோ கானா தேசியப் பூங்கா ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமானது பல்வேறு வகையான பறவைகளின் புகலிடமாக உள்ளது. குளிர்கால மாதங்களில் பல்வேறு பறவைகள் இங்கு இடம் பெயர்கின்றன. சைபீரிய நாரை, புலம் பெயரும் நீர்ப்பறவைகள், பல்வேறு விதமான வாத்துக்கள், நாரைகள், கொக்குகள் ஆகியவை குளிர்ந்த நாடுகளிலிருந்து பறந்து வெதுவெதுப்பான காலநிலை தேடி பாரத்பூருக்கு வருகின்றன.

எவ்வாறு செல்வது: தில்லி ஆக்ரா (யமுனா எக்ஸ்பிரஸ் வே) நெடுஞ்சாலையில் பாரத்பூர் சரணாலயம் உள்ளது. இங்கு தில்லியிலிருந்து சிறு பயணம் மூலம் அடையலாம்.

கட்டணங்கள்:

நுழைவுக் கட்டணம்: இந்தியர்/ வெளிநாட்டினர் ரூ 50/ 400

வீடியோ காமிரா: ரூ.200

வழிகாட்டுதல் கட்டணங்கள்: ரூ.150

வாடகைக் கட்டணங்கள்

சைக்கிள். கியர் உள்ள பைக்குகள்: ரூ.25.50

பைனாக்குலர்கள்: ரூ.100

நேரங்கள்:

ஏப்ரல்- செப்டம்பர்: காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை

அக்டோபர் – மார்ச்: காலை 6,30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை.

3. கஜூராகோ நாட்டிய பண்டிகையை அனுபவியுங்கள்

Khajuraho dance festival, places to visit in winter in india
Flickr Creative Commons/ André Mellagi

 

கஜூராகோ நகரம் வித்தியாசமான குணத்தைக் கொண்டது. இங்கு நளினமாக வடிவமைக்கப்பட்ட கோவில்களுக்கும் அங்குள்ள பிரபலமான ஆண்டு நடனத் திருவிழாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.  மிகவும் கம்பீரமாக விளக்கிடப்பட்ட கோவில்களின் பின்னணியில் இந்திய பாரம்பரிய நடனங்களின் பல்வேறு வடிவங்களையும் கொண்டாடும் ஒரு வார கால திருவிழா இங்கு நடைபெறுகிறது. பிரபலமான கலைஞர்களால் பரதநாட்டியம், குச்சிபுடி, கதகளி, ஒடிசி மற்றும் மணிப்பூரி நடனங்கள் இங்கு ஆடப்படுகின்றன. இதைக் காண்பதற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

2017ஆம் ஆண்டுக்கான நாட்கள்: 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை.

மொத்த நாட்கள்: இந்தத் திருவிழாவில் 2-3 நாட்களைக் கழியுங்கள். பகல் வேளையில் மத்திய கால நகரமான கஜூராகோவைக் கண்டு கழியுங்கள். மாலை வேளையில் நடன நிகழ்ச்சியைக் காணுங்கள்.

4. ஆசியாவின் சுத்தமான கிராமமான மேகாலயாவின் மாவ்லினோங்கைச் சுற்றி வாருங்கள். 

Mawlynnong, Meghalaya, places to visit in winter in india
Flickr Creative Commons/ Ashwin Kumar

மாவ்லினோங்கில் உள்ள சிறிய தெருக்களைப் பார்த்தால் அவை ஓர் ஓவியத்திலிருந்து நேரடியாக வெளியே வந்தது போல் தெரியும். ஒவ்வொரு குடிசைக்கு வெளியிலும் பிரம்பு கூடைகள் உள்ளன. தேவையற்ற குப்பைகளை அவற்றில் சேமிக்கலாம். ஒட்டுமொத்த உள்ளுர் சமூகமும் நீடித்த வாழ்க்கையை பரிந்துரைப்பார்கள். வானுயர்ந்த காட்சி என்று அழைக்கப்படும் 85 மீட்டர்கள் உயரமான பிரம்பு மாடியை இந்த கிராம மக்கள் கட்டியுள்ளார்கள். இங்கிருந்து ஒரு புறம் இந்த கிராமத்தின் எழிலையும் மறுபுறம் வங்கதேசத்தையும் காணலாம்.

இந்த  மாவ்லினோங் கிராமம் ஷில்லாங்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உள்ளூர் மக்கள் ஆலம் விழுதில் பிண்ணிய சிறிய சடை போன்ற வடிவம் கொண்ட சிறிய பெரிய வேர் பாலங்களை நீங்கள் காணலாம். இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் சலசலக்கும் நீர் வீழ்ச்சிகளையும் நீங்கள் காணலாம்.

நாட்களின் எண்ணிக்கை: ஒரு நாள் போதும் ஷில்லாங்கையும் சிரபுஞ்சியையும் உங்கள் பயணத் திட்டத்தில் சேர்த்து உங்கள் விடுமுறையைக் கொண்டாடவும்.

5. உத்தரகண்டில் உள்ள அவ்லியின் பனிச் சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாடுங்கள்

Auli, places to visit in winter in india
Flickr Creative Commons/ Anuj Kumar Garg

 

பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும்  சாகசக்காரர்களுக்கு சிறந்த தேர்வு இமயமலை. நன்கு அனுபவம் கொண்ட பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களின் இல்லம் அவ்லி. நெடுந்தூரம் பயணம் செல்பவர்களுக்கும் துவக்க ஆட்டக்காரர்களுக்கும் இது சிறந்த தேர்வு. இமாலயத்தில் கார்வால் பகுதியானது ஆல்ப்ஸ் மலையோடு ஒப்பிடப்படுகிறது.  இங்கு பனிச்சறுக்கு விளையாடுபவரின் மேல் விழும் பனித்துளி, அதனால் அவருக்கு ஏற்படும் பரவச அனுபவத்தை அவ்வளவு எளிதாக விளக்க முடியாது.

விலைகள்: ஏறத்தாழ ஒருவருக்கு ரூ.3,500

நாட்களின் எண்ணிக்கை: 2/3

சிறந்த நேரம்: உங்கள் மனதில் பனிச்சறுக்கு விளையாட வேண்டும என்ற ஆர்வம் எழுந்தால் அதற்காக அவ்லிக்கு செல்வதற்கான சிறந்த மாதம் ஜனவரி.

6. வண்ணமிகு பௌஷ் மேலாவை அனுபவிக்க சாந்திநிகேதனுக்குச் செல்வோம் 

Shantiniketan Poush Mela, places to visit in winter in india
Flickr Creative Commons/ Soumya P

சாந்திநிகேதனின் பௌஷ் மேலா என்ற பாரம்பரியத்தை துவக்கி வைத்தவர்கள் தாகூரின் குடும்பத்தினர்தான். அதன் பின் உள்ளூர் சமூகத்திடம் இது கிளைத்து வளர்ந்தது. உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். தேவேந்திரநாத் தாகூரும் அவரது குடும்பமும் பிரம்ம சமாஜத்தை ஏற்றுக்கொண்டதை கொண்டாடும் பொருட்டு இந்த பண்டிகை துவங்கப்பட்டுள்ளது. பெங்காலி மாதமான பௌஷ்ஷில் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு விதமான உணவகங்கள், இராட்சத இராட்டினம், விளையாட்டுக்கள், உள்ளூர் இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் இவற்றைக் காண இங்கு வரவும். பழங்குடியினர் நடனங்களும் வெடிக்களும் திருவிழாவிற்கு மேலும் களையைக் கூட்டுகின்றன. பௌஷ் மேலா சென்று பார்க்க வேண்டிய ஆனந்தம்.

நாட்கள் எண்ணிக்கை: 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 23லிருந்து 26 வரை.

7. ஹிமாச்சல் மாநிலம் பிர்-பில்லிங்கில் பாராசூட் பயணத்தை அனுபவியுங்கள். 

Paragliding at Bir Billing, places to visit in winter in india
Flickr Creative Commons/ Fredi Bach

காங்ரா பிராந்தியத்தில் உள்ள இரு சிறிய நகரங்கள் பிர்  மற்றும் பில்லிங் ஆகியவை. இமய மலையின் தௌலதார் தொடருடன் நேரெதிராக அமைந்துள்ளது.  காங்கரா பள்ளத்தாக்கின் கண்கவரும் அழகானது குளிர்காலங்களில் பாராக்ளைடிங் செய்வதற்கு ஏற்ற இடமாக இதனை மாற்றியுள்ளது. உலகிலேயே மிகவும் சிறந்த பாராக்ளைடிங் அனுபவம் இங்கு கிடைக்கும்.  இதனால்தான் பாராக்ளைடிங்கிற்கான 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன. பிர்ரில்தான் நீங்கள் சென்றடையும் இடம் உள்ளது. பில்லிங் பகுதியிலிருந்து உயரே பறக்க வேண்டும். உங்களது பயணத் திட்டத்தில் மெக்லியோட்கஞ்சையும் இணைத்துக்கொள்ளவும். நல்ல உணவு மற்றும் மடாலயங்கள் நிறைந்த திபெத்திய அனுபவம் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

நாட்களின் எண்ணிக்கை: 1-2 நாட்கள்

பில் பில்லிங்கில் பாராக்ளைடிங் செய்வதற்கான கட்டணம்: ஒரு பயணத்திற்கு ரூ.2500

ஏதாவது குளிர்கால சாகசப் பயணத்திற்கு உங்கள் கால்கள்  தற்போது தயாராக இருக்கிறதா? உங்களது விடுமுறைக்கு இப்போதே புக் செய்யவும்.