விடுமுறையை விருப்பமாகக் கழிக்க உத்தராகண்ட்டில் 6 சொகுசு தங்குமிடங்கள்

Devika Khosla

Last updated: Jul 10, 2017

Want To Go ? 
   

உத்தராகண்ட் மாநிலம்  பல்வேறு கொடைகளை அள்ளித்தரும் பொக்கிஷம். பண்டைய நகரங்களிலிருந்து மதிக்கப்படும்  புண்ணியஸ்தலங்கள் வரை, கண்கவர் மலை வாசஸ்தலங்களிலிருந்து கூட்டமாக வாழும் காட்டுவாழ்கைப் பூங்காக்கள் வரை, குமாவன் மற்றும் கர்வால் பிராந்தியங்களின் விடுமுறையானது, உங்களுக்குள் இருக்கும் யாத்திரிகனின் உணர்ச்சிக்கு உரம் ஊட்டுவதாகும்.  இங்குள்ள ஒவ்வொரு ஸ்தலமும்  ஒரு தனித்துவமான சாகசப்பயணத்தை அளிக்கிறது. அங்குதான் இருக்கிறது இதன் சந்தோஷம்.  ஒரு வார இறுதி இடைவெளிக்கு நீங்கள் திட்டமிடுகிறீர்களோ அல்லது நீண்ட விடுமுறைக்குத் திட்டமிடுகிறீர்களோ, உங்களது விடுமுறை அனுபவத்தை உத்தரகண்டில் உள்ள இந்த சொகுசான ஹோட்டல்களில் தங்கி உயர்தரமான அனுபவத்தைப் பெறுங்கள். 

1. தி ரிவர்வியூ ரீட்ரீட், கார்பெட்

Riverview retreat, Resorts in Uttarakhand

கோசி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த தி ரிவர்வியூ ரீட்ரீட், ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் சுற்றுப்புறத்தில் சொகுசான வசிப்பிடங்களை வழங்குகிறது. இயற்கையுடன் இணைந்திருக்கும் வகையில் இதன் கட்டிடக்கலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 62 அறைகளும், இரண்டு, மூன்று, நான்கு படுகையறைகளைக் கொண்ட  தனிநபர் வில்லாக்களும், தனியான இரண்டு மாடி அறைகளும் கொண்டு, மலைப்பகுதியின் கண்கவர் காட்சிகளை தொலைவில் இருந்தே காணும் வசதியை அளிக்கிறது.

தி ரிவர்வியூ ரீட்ரீட்டில் உள்ள வசதிகள் மிகவும் உயர்தரமானவை. இதில் ஒரு கர்னி இல்லம், கோசி ஆற்றைக் கண்டுகொண்டே உண்ணக்கூடிய பல்சுவை உணவகம், கிரில் உணவுகள் அளிக்கும் உணவகம், மதுபானம் அருந்தகம் மற்றும்  மாநாட்டு அரங்கம் ஆகியவை உள்ளன. பல்வேறு விதமான சிகிச்சைகள் கொண்ட ஸ்பா உங்கள் விருப்பத்தை தூண்டும். அங்குள்ள நீச்சல் குளம் உங்களுக்கு ஓய்வையும் நிம்மதியையும் தரும்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.7,875லிருந்து துவங்குகிறது.

இடம்: ஜீரோ கார்ஜியா, கார்பெட் தேசியப் பூங்கா, திக்குலி, ராம்நகர், நைனித்தால், உத்தராகண்ட் 244 715. 

Book Your Stay at Riverview Resort

2. தி நைனி ரீட்ரீட், நைனித்தால்

Naini Retreat, Resorts in Uttarakhand

நைனிடாலில் உள்ள சொகுசான பசுமையான அயல்பட்டா சரிவுகளில்  உள்ள தி நைனி ரீட்ரீட், ஒரு காலத்தில் பில்லிபிட் மகாராஜாவின் கோடை வாசஸ்தலம். 1,195 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது. குமாவன் மலைத்தொடரின் கண்கவர் காட்சிகளையும் நைனி ஏரியின் அழகிய தோற்றத்தையும் 360 டிகிரி கோணத்தில் இந்த ஹோட்டல் வழங்குகிறது.

 பண்டைய உலகத்தின் எழிலும் தற்போதைய நவநாகரிக பாணியும் ஒரு சேர இணைந்து  இந்த ஹோட்டலில் சொகுசான அறைகளையும் தங்கும் இடங்களையும் அளித்துள்ளன. நைனி ரீட்ரீட்டில் தங்கும்போது விருந்தினர்களுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகின்றன. பல்சுவை உணவகம், மதுபானம் அருந்தகம், நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டத் தீ நிகழ்ச்சிகள் (பான்ஃபைர்)  ஆகியவையும் நடக்கின்றன. இவையனைத்திற்கும் மேலாக, இந்த ஹோட்டலில் உள்ள ஸ்பாக்கள்  பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சையையும் ஐரோப்பிய மசாஜ்களையும் இணைந்து அளித்து விருந்தினர்களுக்கு புத்துணர்ச்சியையும் புதுப்பொலிவையும் அளிக்கின்றன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.6,500 லிருந்து துவங்குகிறது.

இடம்: அயர்பேட்டா, மல்லித்தால், நைனித்தால், உத்தராகண்ட் 263 002. 

Book Your Stay at Naini Retreat

3. தி ஹவேலி ஹரி கங்கா, ஹரித்வார். 

Resorts in Uttarakhand, Haveli Hari Ganga

1913ஆம் கட்டப்பட்டு, அன்று ஹவேலி என்று அறியப்பட்ட இந்த ஹவேலி ஹரி கங்கா, தற்போது ஒரு சொகுசான பாரம்பரிய ஹோட்டல். ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில்  அமைந்துள்ள இந்த  ஹோட்டல் ஹர் கி பௌரியிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் உள்ளது.  தனியான குளிக்கும் படித்துறையானது இந்த ஹோட்டலிலேயே உள்ளது இதன் சிறப்பு.  விருந்தினர்களுக்கு இராஜபோக அனுபவத்தையும் ஆன்மிக ஆனபவத்தையும் ஒரு சேர அளிக்கிறது ஹவேலி ஹரி கங்கா.

 இங்கு 20 குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், நவீன வசதி கொண்ட தங்குமிடங்கள் ஆகியவை உள்ளன. உணவருந்தும் கூடத்தில் விருந்தினர்கள் தங்கள் உணவை அனுபவித்து உண்ணலாம். அல்லது நதிக்கரையில் உள்ள மொட்டை மாடியில் பல்சுவை கொண்ட சைவ உணவகத்திலும் ரசிக்கலாம். தி ஹவேலி ஹரி கங்காவில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகளுடன் பஜனைகளும் கீர்த்தனைகளும் வழங்கப்படுகின்றன.  இங்குள்ள ஸ்பாவில் இந்திய ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.8,000லிருந்து துவங்குகிறது.

இடம்: 21, பில்லிபட் ஹௌஸ், ராம்காட்,  ஹரிதுவார்,  உத்தராகண்ட் 249401.

Book Your Stay at Haveli Hari Ganga

4. அலோகா ஆன் தி காஞ்சஸ், ரிஷிகேஷ்

Aloha on the Ganges, Resorts in Uttarakhand

ரிஷிகேஷில் உள்ள அலோகா ஆன் தி காஞ்சஸ், லக்ஷ்மண் ஜூலாவிற்கு(பாலம்) அருகில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. குடும்பத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் உயர்தரமான தங்கும் வசதிகளை டீலக்ஸ் அறைகள் மூலமும், பல்வசதி அறைகள் மூலமும் அளிக்கிறது. இங்குள்ள அனைத்து அறைகளும் தோட்டம் மற்றும் ஆற்றைக் காண்பது போல் அமைந்துள்ளன.

அலோகா ஆன் தி காஞ்சஸ்சில் உள்ள விருந்தினர்கள் அங்குள்ள பல்சுவை உணவகத்தில் தங்கள் உணவை சுவைக்கலாம். லாட்டிட்யூட் மற்றும் பாடியோ என்ற வெளிப்புற உணவகத்திலும் உணவருந்தலாம்.  இந்த ஹோட்டலில் உள்ள பேக்கரி, பல்வேறு விதமான பேக் செய்யப்பட்ட உணவுகளையும் நொறுக்கு தீனிகளையும் அளிக்கிறது.  ஸ்பா, முடிவில்லாமல் நீந்தும் நீச்சல் குளம், யோகா அமர்வுகள் ஆகிய பொழுதுபோக்கு வசதிகளும் கிடைக்கின்றன.  இங்குள்ளவை சுகமானது மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு இதமளிக்கிறது. எனவே உங்கள் பயணத்தை முழுமையாக்க வாருங்கள் அலோகா ஆன் தி காஞ்சஸ் ஹோட்டலுக்கு.

விலை: ஓர் இரவிற்கு ரூ.8,200லிருந்து துவங்குகிறது.

இடம்: தேசிய நெடுஞ்சாலை 58, டபோவான், ரிஷிகேஷ்,   உத்தராகண்ட் 249 192.

Book Your Stay at Aloha on the Ganges

5. ஃபாரஸ்ட் ராஜாஜி தேசிய பூங்கா ரிசார்ட், ஹரிதுவார். 

Resorts in Uttarakhand, Forest Rajaji Park Resort

இராஜாஜி தேசிய பூங்காவின்  உயிர்வளையத்தில்  10 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டுப்பகுதியில் ஃபாரஸ்ட் ராஜாஜி தேசிய பூங்கா ரிசார்ட் அமைந்தளளது. பரந்துவிரிந்த அமைதியான சூழ்நிலையில் சொகுசு வாழ்கையையும் அது பறைசாற்றுகிறது.  சுற்றுப்புறத்தை பாதுகாக்க தேவையான நீடித்த பயிற்சிகள் கொண்ட சுற்றுப்புற நட்புமிக்க தங்குமிடம் இது.  இங்குள்ள 20 உயர்தர காட்டேஜ் முகாம்களில் குளியலறைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் விருந்தினர்களுக்கு மறக்கமுடியாத தங்கும் அனுபவத்தை அது அளிக்கிறது.

 இந்த பூங்காவிற்குள் ஜீப் சவாரியின் மூலம் சென்று அந்த வெட்டவெளியை விருந்தினர்கள் ரசிக்கலாம்.  அங்குதான் மலைப்பகுதிகள், ஓடைகள், மற்றும் விரிந்து பரந்த புல்வெளிகள் ஆகியவை அவர்களுக்காக காத்திருக்கின்றன. இந்த பூங்கா யானைகளின் தேசம். எனவே அங்குக் கண்டிப்பாக யானை கூட்டத்தை நீங்கள் காணலாம். இந்த ஃபாரஸ்ட் ராஜாஜி தேசிய பூங்கா ரிசார்ட்டில் நீங்கள் அனுபவிக்கவிருக்கும் மற்றொரு வெளிப்புற நடவடிக்கைகள் இயற்கை நடைபயிற்சிகள், பறவைகளைக் கண்காணித்தல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை.

விலை: ஓர் இரவிற்கு ரூ.5,525 லிருந்து துவங்குகிறது.

இடம்: கிராமம் – சயார், பட்டி- 2வது உதய் பூர் தால், பௌரி கர்வால்,  உத்தராகண்ட்.

Book Your Stay at Forrest National Park Resort

6. கங்கா லஹரி, ஹரிதுவார்.

Ganga Lahari, Resorts in Uttarakhand

ஹரிதுவாரில் உள்ள சிறந்த ஹோட்டல்களில் ஒன்று இது என்பதில் சந்தேகமே இல்லை. கங்கை நதியின் கௌ காட் படித்துறையில்  முக்கிய இடத்தில் அமைந்துள்ளது கங்கா லஹரி. ஹர் கி பௌரியிலிருந்து நடக்கும் தொலைவில் அமைந்துள்ளது. நவீன வசதிகளுடன் நன்கு இடவசதி கொண்ட வசதியான அறைகள் இங்கு உண்டு. இங்கு ரிவர் சைட் என்ற  பல்சுவை சைவ உணவகம்  உள்ளது.  இந்த ஹோட்டல் அழகிய புனிதமான தீர்த்தங்களைக் கண்டுகொண்டே இருக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் விருந்தினர்கள் புனித கோவில்களுக்கு செல்வதுதான் முக்கிய நோக்கம். அதற்கேற்றபடி கங்கா லஹரியில் உள்ள பணியாளர்கள், அங்கு வரும் விருந்தினர்களின் ஆன்மிக பயணத்தை உயர்விக்க, யோகா மற்றும் தியான அமர்வுகளுடன் பஜன்களையும் கீர்த்தனைகளையும் நடத்துகிறார்கள்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.6,800 லிருந்து துவங்குகிறது.

இடம்: கௌ காட், ஹர் கி பௌரி, ஹரிதுவார், உத்தராகண்ட் 249 401.

Book Your Stay at Ganga Lahari Resort

உத்தராகண்டில் உள்ள பல்வேறு விலைமதிப்பற்ற மாணிக்கங்களுடன், அந்தப் பிராந்தியத்தின் பன்முகத்தன்மையை அனுபவிக்க உங்கள் அடுத்த விடுமுறையை அங்குக் கழிக்க திட்டமிடுங்கள். உத்தராகண்டில் உள்ள இந்த சொகுசு ஹோட்டல்களில் நீங்கள் தங்குவதற்கு விரும்புங்கள்.

More Travel Inspiration For Nainital