கன்ஹா தேசியப் பூங்காவில் உள்ள 5 சொகுசான காட்டு ஓய்விடங்கள்

Chandana Banerjee

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

உங்கள் விடுமுறைகளைக் கழிக்க புலிகள் நிறைந்த காடுகள், எண்ணற்ற சாகசங்கள், தங்குவதற்கு மிகவும் சொகுசான இடம் ஆகியவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா, அப்படியென்றால் கன்ஹாவில் உள்ள சொகுசான காட்டு ஓய்விடங்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. இங்குதான் ருட்யார்டு கிப்ளிங்கின் மௌக்லி வளர்ந்தது. இது உங்களுக்கு மிகச் சரியாக இருக்கும். பல்வேறு தேசிய பூங்காக்களைப் போலவே, இதுவும் பருவ காலங்களுக்குப் பிறகு தன் கதவுகளை பயணிகளுக்கு திறந்து விடுகிறது. ஜூன் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இது உங்களுக்காகத் திறந்திருக்கும்.

சத்பூரா மலைத்தொடர்களில் உள்ள மைக்கால் குன்றுகளில் உள்ள ஒரு பசுமையான காடு, தி கன்ஹா தேசியப் பூங்கா. புலிகளைக் காப்பாற்றுவோம் திட்டத்தின் முக்கியமான அங்கம் இது. 9 புலிகள் சரணாலயங்களுள் ஒன்று. இங்கு இதன் புலிகள் தொகையும் சுற்றுப்புறமும் காக்கப்படுகின்றன.

750 சதுர மைல்கள் தொலைவு பரந்து உள்ள இந்த பசுமையான நில அமைப்பில், சால்மரங்களும், மூங்கில் காடுகளும். புல்வெளிப் பிரதேசங்களும் அதிகம். நீங்கள் இந்த இடத்தை யானையின் முதுகில் அமர்ந்து சவாரி செய்து காண்கிறீர்களா அல்லது ஒரு திறந்தவெளி ஜிப்சியில் சென்று காண்கிறீர்களா, எப்படியிருந்தாலும் நீங்கள் செல்லும்போது எண்ணற்ற பறவைக் கூட்டங்கள், தேன் உண்ணும் கரடிக்கள், புள்ளி மான்களின் கூட்டம் ஆகியவற்றைக் காணலாம். காட்டுராஜாவையும் காண முடியும்.

பஞ்சார் தோலா 

காட்டுப்பகுதியின் உள்ளடங்கிய பிராந்தியத்தை நோக்கிக் கொண்டு தி பஞ்சார் தோலா லாட்ஜ் உள்ளது. இது தாஜ் சஃபாரிஸ் லாட்ஜ் ஹோட்டலின் ஒரு அங்கம். 9 சொகுசான சிற்றறைகள் நிறைந்த இரண்டு முகாம்கள் கொண்டது இந்த ஹோட்டல். நவநாகரிக பாணியில் வெளியில் முகாம் அமைத்துத் தங்க வேண்டும் என்று நினைக்கும் விருந்தினர்களுக்கு குடில்களையும் அமைத்துக் கொடுத்துள்ளது. 90 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்து படர்ந்துள்ள காடுகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த காட்டு ஓய்விடத்தில் தங்கிய விருந்தினர்கள் அவர்கள் அனுபவங்கள் குறித்து உரையாடிக்கொண்டே இருப்பார்கள்.

 அடர்ந்த காட்டுப்பகுதியின் மத்தியில் பண்ணையிலிருந்து மேசைக்கு வரும் உணவுகள், ஆற்றங்கரையில் சிமிழ் விளக்கின் ஒளியில் அளிக்கப்படும் இரவு உணவுகள், உள்ளறை சமையல்காரர்களுடன் உரையாடிக் கொண்டே கற்றுக் கொள்ளப்படும் சமையல் வகுப்புகள், புந்தேல்கண்டு பாணியில் அடுப்படியிலிருந்து ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டிருக்கும் விருந்துகள், என்று விருந்தினர்களை களிப்பூட்டும் இடம் இது.

விலை: ஓர் இரவிற்கு ரூ.12,750லிருந்து துவங்குகிறது.

இடம்: கன்ஹா தேசியப் பூங்கா, கன்ஹா, மத்திய பிரதேசம் 481111

Book Your Stay at Banjaar Tola

கன்ஹா எர்த் லாட்ஜ் 

கன்ஹாவின் உபரி பிராந்தியத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கன்ஹா எர்த் லாட்ஜ் ஹோட்டல். பூங்காவின் வாயில்களில் இருந்து வெறும் 30 நிமிட தொலைவுகளில் உள்ளது கன்ஹா எர்த் லாட்ஜ். உள்ளுர் சுவையுடன் சுகம், வசதி, கிராமப்புற வாசனை நிரம்பிய சொத்து இது. இங்கு 12 குளியலறை அடங்கிய சிற்றரைகளுடன் கூடிய பங்களாக்கள் உள்ளன. ஓய்வெடுப்பதற்கான தாழ்வாரங்களும் உள்ளன. கோண்டு பாணி கட்டிடக்கலையுடன், வீணான மரம் மற்றும் உள்ளுர் கல் கொண்டு இந்த லாட்ஜ் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் இந்த இடத்தை அடைந்த பிறகு ஜீப் சஃபாரிக்கள் மூலமும், சைக்கிள் பயணம், அல்லது நடை பயணம் மூலமும்  காட்டில் சுற்றி உலவலாம். யானை முதுகில் அமர்ந்துகொண்டு காட்டைச் சுற்றி வரலாம். புலிகளைத் தேடலாம். கலை விரும்பிகளுக்கு பழங்குடியின கோண்டு கலைஞர்கள் அளிக்கும் பயிற்சி பட்டறைகள் உள்ளன. இதற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.16,000லிருந்து துவங்குகிறது.

இடம்: பி.ஓ. சரேகா கிராமம். நர்னாகன்ஹா தேசியப் பூங்கா,  கன்ஹா தேசியப் பூங்கா, கன்ஹா, மத்திய பிரதேசம் 481111

Book Your Stay at Kanha Earth Lodge

கோர்ட்யார்டு ஹவுஸ் கன்ஹா

காட்டு குடியிருப்பின் சாகசத்துடன் வீட்டில் தங்கும் அனுபவத்தை இணைத்தால் அதுதான் கோர்ட்யார்டு ஹவுஸ் கன்ஹா. மிகவும் அமைதியான சிறிய போட்டிக் ஹோட்டலான இது கன்ஹா ஹோட்டல் குழுமத்தினரான நீலேஷ் மற்றும் கீர்த்தி அகர்வாலால் கட்டப்பட்டுள்ளது. அகண்ட ஜன்னல்கள் கொண்ட ஐந்து பெரிய காற்றோட்டமான அறைகள் உள்ளன. இங்கிருந்து நீங்கள் வெளிப்புற இயற்கைக் காட்சிகளைக் காணலாம். இந்த இயற்கையான சொகுசான காட்சிகள் உங்கள் பயணத்தை இனிமையாக்கும். ஆற்றங்கரையில் சுற்றுப்பயணம் செல்ல வேண்டுமா, அல்லது காட்டுப்பாதியில் நடக்க வேண்டுமா, கிராமப்புறத்தினருடன் கலக்க வேண்டுமா, காட்டுத்தீயில் புலிக்கதைகள் கேட்டு களிக்க வேண்டுமா, இந்த அனைத்து இன்பங்களையும் ஒரே கூடையில் வைத்து அளிக்கிற இடம் தி கோர்ட்யாட் ஹவுஸ் கன்ஹா.

விலை: ஓர் இரவிற்கு ரூ.6,500லிருந்து துவங்குகிறது.

இடம்: கன்ஹா பாட்பரா, மத்திய பிரதேசம் 481768

Book Your Stay at Courtyard House

சௌலேசியா 

வேட்டையாடும் போது புத்தகம் படிக்க வேண்டும், காட்டுப் பாதை நடை பயணம், கிராமத்து சுற்றுலாக்கள் ஆகியவை தங்கள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றம் இடம் சௌலேசியா. ஒரு குடிலின் வசதி வேண்டும் குடும்பங்களுக்கு ஏற்ற இடம். இங்கு இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய, சிறிய அடுப்பங்கறைகளையும் கொண்ட இதமான குடில்கள் உள்ளன. அல்லது நவீன வசதிகள் நிரம்பிய முகாம்கள் உங்களுக்குத் தேவை என்றாலும் உங்களுக்கு அவை கிடைக்கும். குளத்திற்கு அருகில் உள்ள உணவகம், ஒரு காபியகம், உடற்பயிற்சி நிலையம், ஆகியவை சௌலேசியாவில் உள்ளன. இவை உங்கள் கூடுதல் வசதியையும்  இனிமையையும்  தரும்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.10,000லிருந்து துவங்குகிறது.

இடம்: கடியா கிராமம், கிஸ்லி போஸ்ட், மாண்ட்லா மாவட்டம்,  மத்திய பிரதேசம், இந்தியா 481 768

Book Your Stay at Soulacia

சித்வன்


 

இயற்கையின் அம்சங்களின் பெயரிடப்பட்ட நான்கு  அறைகள் கொண்ட காட்டு லாட்ஜ் சித்வன். ஜல் (நீர்), ப்ருத்வி (நிலம்), ஆகாஷ் (ஆகாயம்) மற்றும் மகாசாகர் (சமுத்திரம்) அகியவற்றின் பெயரில் இந்த அறைகள் உள்ளன. தனித்துவமான அனுபவம் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. கருத்தியல் ரீதியான அனுபவங்களும், சூரிய ஒளி நிறைக்கும்  கண்ணாடிகளும், இந்தப் பெயர்களின் அழகிற்கு வண்ணம் தீட்டுகின்றன. அழகை தாரை வார்த்துக் கொடுத்தது போல் இந்த இடம் உள்ளது.

இங்குள்ள உணவகத்தில் வழங்கப்படும் உணவு முழுவதும் ஆர்கானிக்காக உள்ளது. இதனால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது. உங்கள் வாசற் கதவிற்கு அருகிலேயே உள்ளூர் அனுபவங்களை அள்ளித்தந்து கொட்டும் சித்வன். விருந்தினர்கள் சஃபாரிக்களில் செல்லலாம். இயற்கை விரும்பிகள் இயற்கை நடைபயணம் செல்லாம். இங்குள்ள பறவை கூட்டங்களைப் பற்றியும் பட்டாம்பூச்சி கூட்டங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மாட்டு வண்டிகளில் பயணம் செய்து இங்குள்ள உள்ளூர் சந்தையில் கிராம வாழ்கையின் சுவையை அறியலாம். நாட்டின் இந்தப் பகுதியின் வாழ்கையை அனுபவிக்க சித்வனுக்கு வாருங்கள்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.8,000லிருந்து துவங்குகிறது.                  

இடம்: சாம்னாபூர் கிராமம், முக்கி போஸ்ட்டு, கன்ஹா தேசியப்பூங்கா, பைகார் தேசில், பாலாகாட் மாவட்டம்,  மத்திய பிரதேசம் 481111

Book Your Stay at Chitvan

உங்கள் பையில் இந்தப் பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு ஜோடி பைனாகுலர்களையும், ஒரு காட்டுத் தொப்பியையும், புலிப் பிரதேசத்தில் விடுமுறையைக் கழிக்க எக்கச்சக்கமான உல்லாசத்தையும் எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்.