பட்ஜெட் பயணிகளுக்காக கோவாவில் உள்ள 7 ஹோட்டல்கள்

Chandana Banerjee

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

குளிர்காலம் வந்தால் இந்த கடற்கரை நகரைப் போல் பயணிகளை கவர்ந்து இழுக்கும் வேறு நகரம் இருப்பதில்லை. பச்சை நீல நிறம் கொண்ட இந்தக் கடல்களும் மதுவும் உலகெங்கும் உள்ள பயணிகளை இங்கு கவர்ந்திழுக்கிறது. கடற்கரைகளின் அலையோசைகள், கடலுக்கு அருகிலான விருந்துகள், பின்னிரவு சந்தைகள், தேவாலயங்கள். நறுமணமூட்டும் உணவுகள், சிறிது நேர ஓய்வை விரும்பும் வாழ்க்கை முறை என பல்வேறு இன்பங்களுடன் கோவா பயணிகளை அழைக்கிறது. ஓர் இரவிற்கு செலவழிக்க உங்களிடம் ரூ.6,000க்கும் குறைவாக உள்ளதா, கவலையை விடுங்கள். நீங்கள் தங்குவதற்கு உங்களுக்கு மிகவும் வசதியான இடம் கிடைக்கும்.  கோவாவில் உங்கள் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியான 7 ஹோட்டல்களின் பெயர்கள் அடங்கிய ரகசியப் பட்டியல் இதோ.

அமிகோ பிளாசா

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: கடலுக்கு அருகில் மிகவும் சொகுசான தங்கும் வசதி

கோவா கடற்கரையிலிருந்து வெறும் 200 மீட்டர்கள் தொலைவில் உள்ளது இந்த ஓய்விடம். இந்த இடத்திலிருந்து கல்லெறியும் தூரத்தில் கடல் உள்ளது. இதன் வெள்ளையான மிகவும் அமைதியான மணல் வெளிகளில் நீண்ட நடை பயணம் செல்லலாம். எளிய சுத்தமான அறைகளுடன் இங்குள்ள பணியாளர்கள் மிகவும் நட்பு ரீதியாக உள்ளனர். இவர்களுடனான தங்குமிடம் வசதியாக உள்ளது. அதிகம் கேளிக்கைகள் பெற, இங்குள்ள வெளிப்புற நீச்சல் குளத்தில் ஒரு முறை மூழ்கி எழுந்திருக்கவும். சூடான தொட்டியில் வென்னீர் குளியல் பெறவும். அல்லது உங்கள் புத்துணர்ச்சிக்கு ஏற்றபடி ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளவும்.

விலை: ரூ.1,500 லிருந்து துவங்குகிறது

இடம்: 4வது வார்டு, கோல்வா கடற்கரை, தாலுகா சால்செட், கோல்வா, கோவா 403708.

Book Your Stay at Amigo Plaza Goa

தி கேமிலாட் ரிசார்ட்

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: உங்கள் பட்ஜெட்டில் காலனியாதிக்க சொகுசு வாழ்க்கையின் ஒரு துண்டை அனுபவிப்பது

ஐரோப்பிய பாணி அறைகளுடனும் தோட்டம் சூழ்ந்த மரக்குடில்களுடன் நீச்சல் குளத்தையும் பசுமையான புல்வெளிகளையும்  நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்ட இந்த கோவா ஹோட்டல் நினைவில் கொள்ளத்தக்க காலனியாதிக்கக் காலத்தின் அனுபவங்களை வழங்குகிறது. நவீன உலகின் சொகுசையும் வசதியையும் வழங்குகிறது. கலங்குட் கடற்கரையிலிருந்து வெறும் 1.5 கிலோ மீட்டர் தூரத்திலும் மாபுசா வெள்ளிக்கிழமை சந்தையிலிருந்தும் சிங்வேரியம் கடற்கரையிலிருந்தும்  8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த ஓய்விடம்.

இந்தக் கடற்கரை நகரின் உணர்வில் மூழ்கி எழும்புவதற்கான ஒரு வாய்ப்பை பயணிகளுக்கு இந்தக் கடற்கரை அளிக்கிறது. குளத்திற்கு அருகில் இருக்கும் மது பான அருந்தகத்தில் உள்ள காக்டெயில்களும் பானங்களும், அங்குள்ள பல்தரப்பு உணவகத்தில் உள்ள வயிறு நிறையும் உணவுகளும், சிறப்பம்சம் மிக்க உணவகத்தில் உள்ள சுவையான கடல் உணவுகளும், இந்த இடத்தின் விருந்தளிக்கும் முகத்தை நமக்குக் காட்டுகின்றன.

விலை: ரூ.3,000 லிருந்து துவங்குகிறது

இடம்: பாகா-அர்போரா ரோடு, கோப்ரா வாடோ, கலாங்குட், கோவா 403516.

Book Your Stay at The Camelot Resort

பாலிவுட் ஹோட்டல்

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: உங்களது பணத்திற்கேற்ற முழுமையான கொண்டாட்டமிகு கோவா அனுபவத்திற்காக

 

bollywood sea queen, budget hotels in goa

அமைதியான கோல்வா கடற்கரையிலிருந்து சில நிமிடங்களின் தொலைவில் உள்ள மற்றொரு ஓய்விடம் இது. இங்குள்ள அமைதியான கடற்கரைகளை அனுபவிக்க வேண்டுமா-மணல் வீடுகள் கட்ட வேண்டுமா, சூரிய அஸ்தமனத்தைக் கண்டுகொண்டே நீண்ட தூரம் நடை பயில வேண்டுமா அல்லது இந்த வெள்ளி மணல்வெளியை முத்தமிடும் நுரை மிகுந்த அலைகளைக் கண்டு களிக்க வேண்டுமா, அதற்கான அழகிய பின்னணியை பாலிவுட் ஹோட்டல் வழங்குகிறது. இந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் நீங்கள் மணலும் கடலும் கலந்து விளையாடலாம். இங்குள்ள குளத்தில் உங்களை ஆசுவாசப்படுத்திகொள்ளலாம். பனை மரங்கள் நிறைந்த பசுமை தோட்டத்தில் உள்ளாசமாக விளையாடலாம் அல்லது ஆயுர்வேத சிகிச்சை பெறலாம்.

விலை: ரூ.1,800 லிருந்து துவங்குகிறது

இடம்: கோல்வா பீச், சால்செட் கோல்வா, கோவா 403516.

Book Your Stay at Bollywood HotelBook Your Stay at Bollywood Hotel

கோகோ பாரம்பரிய வீடு

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: ஒரு தென்னந்தோப்பில் உண்மையான கோவாவாசியைப் போல் வசிப்பது

பிரபலமான பாகா கடற்கரையிலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ள கோகோ பாரம்பரிய வீடும் ப்ளூ வேல் வாட்டர் பார்க் ரிசார்ட்டும் தான் சொல்வதைப் போலவே அமைந்துள்ள, நவீன வசதிகளுடன் இணைந்த பாரம்பரிய கோவா பாணி இடம். பயணிகளுக்கு, அற்புதமான, கோவா பாணி வாழ்கை முறையை அளிப்பதே இதன் நோக்கம். அதே சமயம் ஒரு கொத்து சாகசத்தையும் இது அளிக்கிறது. ஒரு தென்னந்தோப்பில் கட்டுப்பட்டுள்ள இந்த இல்லம், தென்னை விவசாயத்தின் நுணுக்கங்களை விருந்தினர்கள் அனுபவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

 இதன் வழியாக சுற்றுலாக்கள் வழிகாட்டப்படுகின்றன. தென்னை மரம் ஏறுவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்குள்ள கடற்கரையில் நீங்கள் சூரிய குளியல் எடுக்கலாம். நீச்சல் குள விருந்துகளில் பங்கேற்கலாம். தண்ணீர் பூங்காவில் விளையாடலாம். நாவில் எச்சில் ஊறவைக்கும் விருந்தினை அளிக்க, இங்குள்ள அக்வா உணவகத்தில் முயற்சி செய்யவும். கேக்கிற்கு மேல் உள்ள செர்ரியைப் போல் உங்கள் ஒப்பந்தத்தை மேலும் இனிப்பாக்க சில வசதிகளும் உண்டு. கடைசி நிமிடத்தில் அறைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அறை கட்டணத்தில் 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பயணியும் கட்டாயம் செல்லவேண்டிய கோவா உணவகமான பிரிட்டோவிலிருந்து இது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விலை: ரூ.3,000 லிருந்து துவங்குகிறது

இடம்: ப்ளூ வேல் வாட்டர் பார்க், பாகா- அர்பொரா ரோடு, பாகா, கோவா 403516.

Book Your Stay at Coco Heritage HomeBook Your Stay at Coco Heritage Home

பெல்லி விஸ்டோவாடோ- என்விரோ கிரீன் ரிசார்ட்

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: தனித்துவமான கோவா அனுபவத்திற்காக அதற்கேற்ற உணவுப்பிரியர்களுக்கானது

கலங்குட் கடற்கரையிலிருந்தும் சங்கோல்டா பஞ்சாயத்திலிருந்தும் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் குடிலைப் போன்ற அழகுடன் உள்ள கோவா பாணி அழகிய ஓய்விடம் இது. இந்த நகரைச் சுற்றியுள்ள கடற்கரைகளை சுற்றித்திரியும் வேளையில் கோவாவின் உணவு வகைகளில் திளைப்பதற்கும் இந்த இடம் உதவும். இந்த பெல்லி விஸ்டாவடோவில் குளிர்சாதன வசதி கொண்ட 12 பங்களா பாணி அறைகளும் இரண்டு சொகுசான சிற்றறைகளும் உள்ளன. கோவா பாணியில் கடற்கரை உணவு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மூன் ஃபிஷ் உணவகம் நல்ல மதிய உணவை வழங்குகிறது. கான்டினென்டல் உணவு வகைகளை அங்குள்ள மடிரா என்ற உணவகம் வழங்குகிறது. உங்களது சுவை நரம்புகளை தூண்டிவிடுவதற்கு இங்குள்ள ரூஃப்டாப் ( மேற்கூரையில் உள்ள) பார்பெக்யூ (இறைச்சி சுடுமுறை) உணவகம் கிரில்டு (சுடப்பட்ட) உணவுகளை வழங்குகிறது.

விலை: ரூ.2,000 லிருந்து துவங்குகிறது

இடம்: எண்.162, சோம் ரோடு சங்கோல்டா, பார்டேஜ், சங்கோல்டா,  கோவா 403511.

Book Your Stay at Belle WistaWadoBook Your Stay at Belle WistaWado

தி க்வீனி

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: பட்ஜெட்டில் கிடைக்கும் இளவரசிகளும் மகாராணிகளும் 

Hotel Queeny, budget hotels in goa

தேசிய நெடுஞ்சாலை என்ஏச் 17பியில் அமைந்துள்ளது தி க்வீனி. மிகவும் இதமான, நவநாகரிகமான, நவீனமான இந்த ஓய்விடம் கடலை நோக்கிக்கொண்டுள்ளது. உங்களது விடுமுறையை சாவகாசமாக நினைவில் வைத்திக்கொள்ளும் அளவிற்குச் செய்யும். கப்பல் வான் அருங்காட்சியகத்திலிருந்து வெறும் 9 கிலோ மீட்டர் தூரத்திலும் உட்டோர்டா கடற்கரையிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த இடம் அமைந்துள்ளது.

பால்கனி வசதியுள்ள இந்த ஓய்விடத்தில் எல்லாவிதமான நவீன வசதிகளும் உள்ளன. சன்மானமான காலை உணவு கூட்டு விருந்தாக (பஃபே) கிடைக்கிறது. இதில் உள்ள சிறிய குளம், கடலைக் கண்டு கொண்டே உணவு உண்ணும் வசதி, கிராமப்புற மேல் தள உணவகம் ஆகியவை நீங்கள் வெளியில் செல்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. உங்களது அன்புக்குரியவர்களுடன் ஓய்வாக நேரம் கழிக்கவும் இது உதவுகிறது.

விலை: ரூ.3,000 லிருந்து துவங்குகிறது

இடம்: க்வீனி நகர், வெல்சாவோ- பாலி, விமான நிலையம் சாலை அருகில், வாஸ்கோ ட காமா, கோவா 403511.

Book Your Stay at The QueenyBook Your Stay at The Queeny

நியூ இமேஜ் இன்

நாம் தேர்ந்தெடுக்க விரும்புவது: நிறைய சேவையுடன் யதார்த்தமான ஓய்விடம் விரும்பும் குடும்பங்களுக்கானது

மிகவும் அமைதியாகவும் நட்புணர்வுடனும் உள்ள இந்த சூரிய ஒளி கொண்ட மஞ்சள் நிற ஓய்விடமானது கலங்குட் சந்தை, புனித அலெக்ஸ் தேவாலயம், கேசினோ பனைகள் ஆகியவற்றிலிருந்து சில நிமிடங்களின் தொலைவில் உள்ளது. எல்லாவிதமான நவீன வசதிகள் கொண்ட 20 குளிர்சாதன வசதி மிக்க அறைகளும் வெளிப்புற குளமும் உள்ளன. காவி நிற வெளிபுறத்தில் பச்சைநீல நிற ஆபரணம் போல் உள்ள நியூ இமேஜ் இன், உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வசதியாக தங்குவதற்கான இடம். இனிமையான தனித்துவமான வாடிக்கையாளர் சேவை வழங்குவதில் இது உயர் இடத்தில் உள்ளது. மிகவும் சுவையான கான்டினென்டல் காலை உணவு சன்மானமாகக் கிடைப்பது போனஸ்.

விலை: ரூ.4,350 லிருந்து துவங்குகிறது

இடம்: டாக்டர் அபோன்சா ரோடு, கலங்குட், கோவா 403516.

Book Your Stay at New Image InnBook Your Stay at New Image Inn

பட்ஜெட்டிற்கான குறிப்பு: ஒரு இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவும். உங்கள் கையில் ஒரு வரைபடத்தை எடுத்துக்கொள்ளவும். மணலும் கடல் உணவும் நிறைந்த இந்த இடத்தை உங்கள் வேகத்தில் பறைசாற்றவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

More Travel Inspiration For Goa