தாய்லாந்தில் உள்ள 10 குழந்தைகளுக்குப் பிரியமான ஹோட்டல்கள்

Devika Khosla

Last updated: Jun 29, 2017

Want To Go ? 
   

பல்வேறு பெற்றோருக்கு, குழந்தைகளுடன் விடுமுறையைத் திட்டமிடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. உறங்கும் நேரம், உணவு நேரம், செயல் நேரம் என்று பலவற்றிற்கு நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுடன் செலவிட பல விதத்திலும் உகந்த நாடு தாய்லாந்து. அதற்கென்ன பெற்ற பெயரிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள சில ஹோட்டல்களில் உள்ள வசதிகள் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பதற்றத்தை தணித்து அவர்களை முழுமையான மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் உங்களது அடுத்த விடுமுறையைக் கழிக்க உதவும் 10 குழந்தைகளுக்குப் பிரியமான ஓய்விடங்கள் இதோ.

கிராண்ட் சுக்கும்விட் ஹோட்டல், பாங்காக்

Grand-Sukhumvit-Hotel,-Bangkok-hotels-in-thailand

மிகவும் பிரசித்தி பெற்ற அக்கார் குழுமத்தால் நிர்வகிக்கப்படுவது கிராண்ட் சுக்கும்விட் ஹோட்டல் எனப்படும் இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல். இது பாங்காக்கின் சுக்கும்விட் பகுதியில் உள்ளது. இந்த ஹோட்டலில் 386 அறைகளும் சிற்றறைகளும் உள்ளன. 12 வயது வரை அல்லது அதற்குக் கீழான வயது உள்ள இரண்டு குழந்தைகள் வரை, அவர்கள் தங்கள் அறையை தங்கள் பெற்றோருடன் பகிர்ந்துகொண்டால்,  எந்த விதமான கட்டணமும் கிடையாது.

கிராண்ட் சுக்கும்விட் ஹோட்டலில் குழந்தைகளுக்காகவும் பெற்றோருக்காகவும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இலவச வைஃபை வசதி, இங்குள்ள உணவகங்களில் குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகள், குழந்தைகள் நீச்சல் குளத்துடன் உள்ள பெரியவர்களின் நீச்சல் குளம் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. பெற்றோர்களுக்கான குழந்தை பராமரிப்பு வசதியும் உள்ளது. தனிமை வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கும் வசதி. கிராண்ட் சுக்கும்விட் ஹோட்டல் அமைந்துள்ள இடம் மிகவும் முக்கியமானது. டெர்மினல் 21, மத்திய உலகம் மற்றும் பிற கடைத்தெரு பேரங்காடிகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு மையங்களுக்கு அருகில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

விலை: ஓர் இரவிற்கு ரூ.3,836லிருந்து துவங்குகிறது.

இடம்: 99 சுக்கும்விட் சாய் 6 ரோடு, கிளாங்டோய் மாவட்டம், பாங்காக் 10110

Book Your Stay at Grand SukhumvitBook Your Stay at Grand Sukhumvit

தி அம்பாசடர் பாங்காக், பாங்காக்

The-Ambassador-Bangkok,-Bangkok-hotels-in-thailand

தி அம்பாசடர் பாங்காக் ஒரு முன்னணியான 4 நட்சத்திர ஹோட்டல். நகரின் சுக்கும்விட் பகுதியில் உயர்தர வசதிகள் பெற்று இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. டவர் மற்றும் மெயின் விங்ஸ் பகுதிகளில் 760 அறைகள் உள்ளன. உள்ளறை வசதிகளில் தட்டையான திரை கொண்ட தொலைக்காட்சிகள், இலவச வைஃபை வசதிகள் ஆகியவை உள்ளன.

தி அம்பாசடர் பாங்காக்கில் பல்வேறு நடவடிக்கைகள் கொண்ட குழந்தைகள் கிளப் உள்ளது. இங்குள்ள உணவகங்களில் குழந்தைகளுக்காக சிறப்பு உணவுப்பட்டியல் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு கேளிகை கவர்ச்சியை இது அளிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்காக மரத்திலேயே உள்ள பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு வெப்பமண்டல, தனிச்சிறப்பு வாய்ந்த பல்வேறு விதமான பறவைகள் உள்ளன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.3,774 லிருந்து துவங்குகிறது.

இடம்: 171 சோய் சுக்கும்விட் 11, கெவாங் கிளாங் டோய் நுயியா, கெட் வாட்டனா, கிரங் தெப் மகா நக்கோன் 10110

Book Your Stay at The AmbassadorBook Your Stay at The Ambassador

தி சென்சஸ் ரிசார்ட் படாங் பீச், பூகத்

The-Senses-Resort-Patong-Beach,-Phuket-hotels-in-thailand

பூகத்தில் உள்ள படாங் கடற்கரைக்கு மிக அருகில் தி சென்சஸ் ரிசார்ட் படாங் பீச் உள்ளது. இந்த ஓய்விடத்தில் ஆறு விதமான அறைகள் உள்ளன. இதில் உள்ள குடும்ப அறைகளில் கடல் அழகை கண்கவர காணலாம். இவை நவீன வசதிகளுடன் உள்ளன. மேற்கூரையில் உள்ள ஸ்ப்ளாஷ் மவுண்டைன் இன்ஃபினிட்டி குளத்தையும் ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையத்தையும் பெரியவர்கள் அனுபவிக்கலாம். அதே சமயம் குழந்தைகள் அவர்களுக்கான நீச்சல் குளத்தில் விளையாடலாம். அங்குள்ள ஸ்மைலி ஃபேஸ் கிளப்பில் பல்வேறு விதமான வேடிக்கை விளையாட்டுக்கள் உள்ளன. எனவே குழந்தைகளுடன் தி சென்சஸ் ரிசார்ட் படாங் பீச்சிற்கு செல்லவும்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.5,792 லிருந்து துவங்குகிறது.

இடம்: 111/7, தனோன் நானய், படாங், காத்து மாவட்டம், 83150

Book Your Stay at The Senses ResortBook Your Stay at The Senses Resort

அமாரி பூகத், பூகத்

அமாரி பூகத்தானது ஒரு கடற்கரை ஓய்விடம். இது பூகத்தில் உள்ள சொகுசான 5 நட்சத்திர ஓட்டல். இந்த தங்குமிடத்தில் 380 அறைகளும்  சிற்றறைகளும் உள்ளன. மிகச்சிறந்த அறை வசதிகள் உள்ளன. இலவச வைஃபை வசதி, எல்சிடி டிவிக்கள், டிவிடி பிளேயர்கள் ஆகியவை உள்ளன. குழந்தைகள் விரும்பும் உணவுப்பட்டியல்கள் இங்குள்ள கிட்ஸ் கிளப்புகளில் உள்ளன. இது செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுக்கள் நிறைந்தது. அமாரி பூகத்தில் குழந்தை பராமரிப்புச் சேவையும் உண்டு.  வயது முதிர்ந்த குழந்தைகள் இங்குள்ள விளையாட்டு வசதிகளை அனுபவிக்கலாம். இரண்டு டென்னிஸ் கோர்ட்டுகள், சிறிய சாசர் திடல், கூடைபந்து விளையாட்டிற்கான பல்நோக்கு திடம், பேட்மிண்டன் திடல் ஆகியவை உள்ளன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.10,300 லிருந்து துவங்குகிறது.

இடம்: 2 மியூன் கெர்ன் படாங் பீச், பூகத், 83150

Book Your Stay at AmariBook Your Stay at Amari

கேப் தாரா, பட்டாயா

Cape-Dara,-Pattaya-hotels-in-pattaya

பட்டாயாவில் உள்ள கடற்கரை வாசஸ்தலம் கேப் தாரா. இது பசுமையான மரம் செடிகொடிகளால் சூழப்பட்டுள்ளது. 360 டிகிரி கோணத்தில் கண்டால் இதன் 264 அறைகளும், சிற்றறைகளும், வில்லாக்களும் திறந்த வான் காட்சியை அளிக்கின்றன. சிறந்த வசதிகள் அளிப்பது குறித்து பெருமை பேசுகின்றன.

இலவச வைஃபை வசதி, கடற்கரைக்கு தடை உண்டாக்குதல், 42” எல்இடி கேபிள் டிவிக்கள் ஆகியவை உள்ளன. கேப் தாராவில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் தனிப்பட்ட கடற்கரையும் இரண்டு நீச்சல் குளங்களும் உள்ளன. குறிப்பிட்ட விளையாட்டுப் பகுதி மற்றும் செயல்பாடுகள் உள்ள குழந்தைகள் கிளப் ஆகியவையும் இங்கு உள்ளன. கேப் தாராவில் குழந்தை பராமரிப்பு வசதிகளும் உண்டு. 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு சன்மானமாக அளிக்கப்படுகிறது.

விலை: ஓர் இரவிற்கு ரூ.18,729லிருந்து துவங்குகிறது.

இடம்: 256 தாரா கடற்கரை, சொய் 20, பட்டாயா நக்லுவா ரோடு, பட்டையா, சோன் புரி 20150

Book Your Stay at Cape DaraBook Your Stay at Cape Dara

சொல்சான் பட்டயா ரிசார்ட், பட்டாயா

பட்டாயாவிற்கு அருகில் உள்ள குழந்தைகளை கவரும் இடங்களான நீரடி உலகமான பட்டாயாவிற்கு மிக அருகில் சொல்சான் பட்டாயா ரிசார்ட் அமைந்துள்ளது. இது கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது. இங்குள்ள அறைகளில் வைஃபை வசதிகள் உள்ளன. வெப்பமண்டல மலைகள் மற்றும் கடலின் காட்சியை இங்கிருந்து காணலாம். 1 மற்றும் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சன்மானமாக தங்கும் இடமும் காலை உணவும் கிடைக்கின்றன. சொல்சான் பட்டாயா ரிசார்ட்டின் குழந்தைகளுக்கான நீச்சல் குளம், டென்னிஸ் ஆடுகளம், ஸ்குவாஷ் ஆடுகளம் ஆகியவை உள்ளன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.4,300லிருந்து துவங்குகிறது.

இடம்: சொய் சுக்கும்விட் பட்டாயா 1, முவாங் பட்டாயா, ஆம்ஃபோ பாங் லாமுங், சாங் வாட் சோன் புரி 20150.

Book Your Stay at Choldchan Pattaya ResortBook Your Stay at Choldchan Pattaya Resort

தீவானா பிளாசா கிராபி ஆவோனாங், கிராபி

Deevana-Plaza-Krabi-Aonang,-Krabi-hotels-in-thailand

213 சிறிய அறைகளும், குறுகிய அறைகளும் கொண்டது தீவானா பிளாசா கிராபி ஆவோனாங். இது பல்வேறு விதமான வசதிகளை குழந்தைகளுக்காகவும் பெரியோர்களுக்காகவும் அளிக்கிறது. இந்த ஹோட்டலின் மிக முக்கியமான அம்சம் இங்குள்ள காயல் வடிவ நீச்சல் குளம். குழந்தைகளுக்கான குளத்துடன் இரண்டு கூடுதல் குளங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு சாகமான உணவுப் பட்டியல்கள் இங்குள்ள உணவகங்களில் உள்ளன. இங்குள்ள மைனா கிட்ஸ் கிளப்பில் குழந்தைகள் விளையாடும்போது அவர்களை ஹோட்டல் பணியாளர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். உள்ளறை விளையாட்டுப் பகுதி, விளையாட்டுக்கள், பொம்மைகள், போன்று பல்வேறு செயல்பாடுகளை தீவானா பிளாசா கிராபி ஆவோனாங்கில் செயல்படுத்தலாம்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.5,010லிருந்து துவங்குகிறது.

இடம்: 186 மூ 3 சொய் 8, ஆவோ நாங், மியாங் கிராபி மாவட்டம், கிராபி 81000

Book Your Stay at Deevana Plaza Krabi AaonangBook Your Stay at Deevana Plaza Krabi Aaonang

சென்டாரா கிராண்ட் பீச் ரிசார்ட் மற்றும் விலாக்கள், கிராபி

பச்சை நீல நிற தண்ணீர் பகுதியில் அழகிய விளிம்பில் இந்த சென்டாரா கிராண்ட் பீச் ரிசார்ட் மற்றும் விலாக்கள் அமைந்துள்ளன. உண்மையிலேயே வெப்பமண்டல பகுதியில் கிடைத்த உன்னதமான இடம். பல்வேறு அறைகள், சிற்றறைகள், தனியான குளங்கள் கொண்ட  விலாக்கள் ஆகியவற்றுடன் விரிந்து பரந்துள்ளன.

கேம்ப் சஃபாரியுடன் உள்ள கிட்ஸ் கிளப்பில் குழந்தைகள் உல்லாசமாக பொழுதைக் கழிப்பார்கள். இ ஜோனும் அதன் தினசரி நடவடிக்கைகளையும் அவர்களை சந்தோஷப்படுத்தும். பெரியவர்கள் சூரிய ஒளி, மணல் மற்றும் அலை ஆகியவற்றை இந்த ஹோட்டலின் தனி கடற்கரையில் அனுபவிக்கலாம். சென்டாரா கிராண்ட் பீச் ரிசார்ட் மற்றும் விலாக்களில் இரண்டடுக்கு நீச்சல் குளம் மற்றும் குழந்தைகள் குளம், ஸ்பா, நீர் விளையாட்டுக்கள் மற்றும் கடற்கரை விளையாட்டுக்களான வாலிபால் மற்றும் கால்பந்து ஆகியவை விளையாடும் வசதிகள் ஆகியவை உள்ளிட்ட நட்சத்திர வசதிகள் உள்ளன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.13,662 லிருந்து துவங்குகிறது.

இடம்: 396-396\1 ஆவோ நாங், மூ 2 முயாங் கிராபி, கிராபி, 81000

Book Your Stay at Centara Grand Beach Resort & VillasBook Your Stay at Centara Grand Beach Resort & Villas

அமாரி கோ சாமுய், கோ சாமுய்

கோ சாமுய்வில் உள்ள சாவெங் கடற்கரையில் அமாரி கோ சாமுய் உள்ளது. இது ஒரு முன்னணி 5 நட்சத்திர ஹோட்டல். இங்கு பல்வேறு அறைகள், பெரிய குடும்பங்கள் தங்கியிருக்கும் அறைகள், தனிப்பட்ட பால்கனிகள், நவீன வசதிகள், இலவச வைஃபை வசதி ஆகியவை உள்ளன. இங்குள்ள ஸ்பாவில் பெற்றோர்கள் அனுபவிக்கலாம். கிட்ஸ் கிளப்பில் குழந்தைகள் ஈடுபடும் நடவடிகைகள் கண்காணிப்பின் அடிப்படையில் நடைபெறும். அமாரி கோ சாமுயில் பல்வேறு கூடுதல் வசதிகள் உள்ளன. இதில் இரண்டு நீச்சல் குளங்கள், குழந்தைகளின் குளம், குழந்தை பராமரிப்பு சேவை, குழந்தைகளுக்கு இணக்கமான உணவுப் பட்டியல் அளிக்கும் பல்தரப்பு உணவகங்கள் ஆகியவை உள்ளன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.11,450 லிருந்து துவங்குகிறது.

இடம்: 14\3, சாவிங் பீச் கோ சாமுய், சூரத் தானி 84320

Book Your Stay at Amari Koh SamuiBook Your Stay at Amari Koh Samui

புடாரக்‌ஷா ஹுவா ஹின்,ஹுவா ஹின்

Putahracsa-Hua-Hin,-Hua-Hin-hotels-in-thailand

புடாரக்‌ஷா ஹுவா ஹின் ஒரு தனித்துவமான போடிக் ஹோட்டல். இது ஹோட்டல்கள் மற்றும் ரிசார்டுகளின் யுனிக் கலக்‌ஷனால் பராமரிக்கப்படுகிறது. இதில் 67 பெரிய அறைகள், சிற்றறைகள், வில்லாக்கள் ஆகியவை இரண்டு பிராந்தியங்களில் படர்ந்துள்ளன.  இங்கிருந்து பூங்கா, குளம் மற்றும் கடல் ஆகியவற்றைக் காணலாம். உடற்பயிற்சி மையம்,ஸ்பா போன்ற வசதிகள் பெரியவர்களுக்காக உள்ளன. குழந்தைகளுக்கான செயல்பாடுகளில் படம் வரைதல், குழந்தைகள் விளையாடுவதற்கான திடல், குழந்தைகளுக்கான குளம் ஆகியவை உள்ளன. புடாரக்‌ஷா ஹுவா ஹின்னில் இலவச வைஃபை வசதியும் குழந்தை பராமரிப்பு வசதியும் உள்ளது.

விலை: ஓர் இரவிற்கு ரூ.8,000 லிருந்து துவங்குகிறது.

இடம்: ஹுவா ஹின், ஹுவா ஹின் மாவட்டம், பிரசுவப் கிரி கான் 77110. 

Book Your Stay at Putahracsa Hua HinBook Your Stay at Putahracsa Hua Hin