இந்தக் குளிர்காலத்தில் பயணம் செல்லத்தக்க தில்லியில் உள்ள 6 வெளிப்புற உணவகங்கள்

Mikhil Rialch

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

நாடு முழுவதும் தில்லியின் குளிர்காலங்கள் நல்ல காரணத்துடன் கொண்டாடப்படுகின்றன. ரொமாண்டிசிசத்துடன் கை கோர்த்துக்கொண்டுள்ள தில்லி குளிர்காலத்தின் மாலைப் பொழுதுகளில் ஏதோ ஒன்று சிறப்பாக இருக்கிறது. உங்களது கரங்களை இதமாக்க ஒரு கோப்பை தேனீரும், ஒரு கிண்ணம் சூடான ஜிலேபிக்களும், சூடான பக்கோடாக்களும் இருந்தால்  தில்லியின் குளிர்காலங்களில் ஆசிர்வாதம் கிடைத்தது போல் இருக்கும்.

 

ஏதாவது சிறப்பான குளிர்கால நினைவுகள் உங்களுக்கு தேவைப்பட்டால், நீங்கள் ஒரு வேளை உணவை வெளியில் உண்ணலாம்.  இந்தக் குளிர்காலத்தில் நீங்கள் வெளியில் சென்று உணவருந்துவதற்கான 6 வெளிப்புற தில்லி உணவகங்களின் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். அவர்களது நம்பகத்தன்மை உண்மையானது. எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். 

 

தி பாட்பெல்லி ரூஃப் டாப் கஃபே

potbelly cafe

மற்ற சமகால உணவகங்கள் போல் அல்லாது தி பாட்பெல்லி ரூஃப் டாப் கஃபேவானது தனது விருந்தினர்களுக்கு தனித்துவமான உணவை அளிக்கிறது. நாக்கில் எச்சில் ஊறவைக்கும் பாரம்பரிய பிகாரிய உணவுகளை தி பாட்பெல்லி ரூஃப் டாப் கஃபே அளிக்கிறது. இந்த நகரில் சிறந்த லிட்டி சொக்காவிற்கு தி பாட்பெல்லி ரூஃப் டாப் கஃபேதான் சிறந்தது. ஷாபூர் ஜாட்டின் தென்றல் உலவும் எழிலுடன் உள்ள இந்த இடம் தில்லியின் பரபரப்பு வாழ்க்கையிலிருந்து ஓய்வளிக்கிறது. ஹவுஸ் காஸ் கிராமம் முக்கிய இடமாக மாறியதிலிருந்து புதிய ஹிப்ஸ்டர் அடிக்கடி செல்லும் இடமாக உள்ளது. இங்குள்ள பேங்கன் பர்தா (கத்தரிக்காய் சட்னி), ஆலூ பரோட்டா (உருளைக்கிழங்கு சப்பாத்தி), மற்றும் மட்டன் சுக்கா ஆகியவற்றை சுவைக்கவும். இவை சிக்கனமான விலையில் குறிப்பிட்ட அளவில் வழங்கப்படுகின்றன.

 

இடம்: ஷாப்புர் ஜாட்

 

இருவருக்கான விலை: ரூ.1200 (தோரயமாக.)

 

அமர் – தி பேஷியோ உணவகம், கஃபே மற்றும் பார்

amour, hauz khas

சிறப்பு தருணங்களில் நீங்கள் வெளியே செல்லத் தகுந்த இடம் அமர் – தி பேஷியோ உணவகம், கஃபே மற்றும் பார். பெயருக்கு ஏற்றபடி இது மிகவும் சிறந்த உணவகம். ஹவுஸ் காஸ் கிராமத்திலேயே மிகவும் சிறந்த ரொமாண்டிக்கான உணவகம் இது. ஏரியை நோக்கிக் கொண்டு இருப்பதுபோல் இதன் வெளிப்புற அமைப்பு உள்ளது. இதன் முழு பயனையும் அனுபவிக்க இரவில் செல்லவும். இங்குள்ள பிரஞ்சு, இத்தாலிய, கான்டினென்டல், மெடிட்டரேனியன் மற்றும் கடல் உணவுகளை சுவைக்கவும்.

 

இடம்: ஹவுஸ் காஸ் கிராமம்

 

இருவருக்கான விலை: ரூ.2800 (தோரயமாக)      

 

 

இம்பெர்ஃபெக்டோ

imperfecto, hauz khas

ஹவுஸ் காஸ் கிராமத்திலேயே உள்ள மிகவும் குளிரான உணவகம் இம்பெர்ஃபெக்டோ என்று தில்லியின் உணவு விரும்பிகள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். தடையில்லாத அலங்காரத்துடன் இந்த ஒட்டுமொத்த இடமும் உங்களைக் கவர்ந்திழுக்கும். எந்த நேரத்திலும் உங்களை நோக்கி இந்த இடம் இறங்கி வரும். இங்குள்ள மாடிப் படிகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் பிங் நிற ஸ்கூட்டரைக் கண்டால் குழந்தைகள் தவறாமல் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவார்கள்.

 

 இதமான எழிலுடன் இத்தாலிய ஸ்பானிஷ் உணவுகளை பரிமாறுகின்றன. நேரடியான இசை இரவுகளுக்கு இந்த உணவகம் மிகவும் பிரபலம். சூரிய அஸ்தமனத்தை இதன் அமைப்பு தங்களுக்கு சாதகமாக எடுத்துகொள்கிறது. பல்வேறு விதமான அழகிய விளக்குகளுடன் உங்கள் அனுபவத்தை அதிகரிக்கிறது. ரொமாண்டிக்கான நாட்களுக்கும் நண்பர்களுடனான களிப்பிற்கும், ஹவுஸ் காஸ் கிராமத்திலேயே உள்ள மிகவும் சிறந்த உணவகம் இம்பெர்ஃபெக்டோ. இங்கு நீங்கள் சென்றால் இந்த உணவகம் உங்களுக்கு எதையோ கூறும்.

 

 இடம்: ஹவுஸ் காஸ் கிராமம்

 

 இருவருக்கான விலை: ரூ.2000 (தோரயமாக.)

 

லோதி – தி கார்டன் உணவகம் 

lodhi garden restaurant

மத்திய தில்லியில் உள்ள லோதியில் உள்ள இந்த கார்டன் உணவகமானது இந்த அமைப்பில் அதிகாரத்தில் உள்ளவர்களின் சுவைக்கு ஏற்ப உணவளிக்கிறது. அதாவது வெளிநாட்டுத் தூதுவர்கள், எழுத்தாளர்கள், மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், சிந்தனைக் குவியலாக இருக்கும் அறிவு ஜீவிகள் போன்றோர் உணவு உண்ணும் இடம் இது. இங்குள்ள அதி சிறந்த ரொமாண்டிக்கான அழகினால் பல்வேறு தம்பதியர் கைகோர்த்துக்கொண்டு அமர்ந்திருப்பர். மாலை வேளைகளில் இங்குள்ள விளக்குகள் மங்கலாகவும் இந்த உணவகத்தின் பசுமையான சூழல் இதற்கு ஒரு பிரகாசத்தையும் அளித்து ஒரு அன்யோன்யமான சூழலை உருவாக்கும். லோதி, தி கார்டன் உணவகத்தின் அற்புதமான லெபனிய, முகலாய், கான்டினென்டல், மற்றும் ஐரோப்பிய வகை உணவுகள் கிடைக்கும்.

 

 

இடம்: லோதி ரோடு

 

     இருவருக்கான விலை: ரூ.2500 (தோரயமாக.)

 

செவில்லா – தி க்ளாரிட்ஜஸ்

sevilla, claridges, new delhi

ரொமாண்சின் கலையைப் புரிந்துகொள்ள ஸ்பானியார்டுகளை நம்பவும். இந்த பெயர் சுட்டிக்காட்டுவது போல தி க்ளாரிட்ஜஸ் ஹோட்டலில் உள்ள ஸ்பானிஷ் வகை உணவகம் செவில்லா ஆகும். இங்கு உயர்தர ஸ்பானிஷ் உணவு பரிமாறப்படுகிறது.

 

நமது பட்ஜெட்டின் இதற்கான விலை சற்று அதிகம் என்றாலும் நீங்கள் உங்கள் துணையுடன் வெளியே வரும்போது மூச்சடைக்க செய்யும் அனுபவத்தை இந்த உணவகம் அளிக்கிறது. இங்குள்ள மங்கலான ஒளிவிளக்கு, இடத்தையும் தனிமையையும் அளிக்கும் இதமான அமரும் இடம் ஆகியவை அந்யோன்யமான சூழலை உருவாக்குகின்றன. இங்குள்ள  பின்னணி ஸ்பானிஷ் இசை எவரையும் மதி மயக்கும். நாக்கில் எச்சில் ஊறவைக்கும் உணவு பட்டியலுடன் பல்வேறு விதமான காக்டெயில் பார்ட்டிகளும் உண்டு. உங்கள் துணையுடன் நீங்கள் வெளியில் செல்ல மிகச் சிறந்த இடம் இது.

 

 

இடம்: தி க்ளாரிட்ஜஸ் ஹோட்டல்

 

இருவருக்கான விலை: ரூ.2500 (தோரயமாக.)

 

சாம்ஸ் கஃபே 

sams-cafe-delhi

ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் உங்கள் துணையுடன் நீங்கள் வெளியில் சென்று உணவருந்த வேண்டுமா சாம்ஸ் கஃபேயைத் தாண்டி நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை. ஹிப்பிக்களும் மாணவர்களும் நிறைந்துள்ள இடமான பார்ட்கஞ்சில் உள்ள இந்த உணவகம் மிகவும் சிக்கனமானது. எல்லாவிதமான அனுபவங்களும் இங்கு கிடைக்கும். பயணிகள் தங்கள் பயணக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

 

 துணையுடன் வெளியில் வந்த ஜோடிகளும் நண்பர்கள் கூட்டமும் இங்கே வரும். இங்கள்ள உணவுப் பட்டியல் மிகவும் சிக்கனமான விலையைக் கொண்டது. அதிக செலவில்லாமல் உங்கள் நண்பர்களுக்கு விருந்தையும் மதுவையும் இங்கு அளிக்கலாம். இரவில் தான் இந்த உணவகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். ஒளி விளக்குகளால் மந்தமான ஒளியூட்டப்பட்டு, பார்ட்கஞ்சின் இரைச்சலுக்கு மத்தியில் ஓர் அற்புதமான சரணாலயமாக இந்த உணவகம் உள்ளது. இங்கு நீங்கள் யாருடன் சென்று உணவு உண்டாலும் அது கண்டிப்பாக நினைவு கூறத்தக்கதாகவே இருக்கும்.

 

இடம்: பார்ட்கஞ்ச்

 

இருவருக்கான விலை: ரூ.1000 (தோரயமாக.) 

 

எனவே வாசகர்களே, இதில் எந்த வெளிப்புற தில்லி உணவகத்திற்கு  நீங்கள் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளீர்கள்?