ஒரு மிகச்சிறந்த குடும்ப விடுமுறைக்கான 7 குழந்தைகளுக்கு பிடித்தமான துபாய் ஹோட்டல்கள்

Mikhil Rialch

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

இந்தியாவிற்கு அருகில் இருப்பதாலும் மற்றும் தன்னுடைய கவரும்படியான சுற்றுலா வசதிகளை அளிப்பதனாலும், துபாய் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான மிகப் பிரபலமான வெளிநாட்டுத் தலங்களில் ஒன்றாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவை, மற்றும் ஒவ்வொரு இடத்திலும் காணப்படும் பல்வேறு விதமான கலாச்சாரங்கள் ஆகியவைகள் மூலம் துபாய் ஒரு செழிப்பான நாடாக இருக்கின்றது.

இது குடும்பத்தினரை கவர்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. எனவே அடுத்து முறை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் விடுமுறைக்கு ஒரு சிறந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதாக செய்து கொடுத்த சத்தியத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடும் போது, உங்கள் பட்டியலில் துபாயைக் குறித்துக் கொள்ள மறக்க வேண்டாம். நீங்கள் இங்கே உங்கள் குடும்பத்தினர் விடுமுறையை கொண்டாட 7 குழந்தைகளுக்கு பிடித்தமான துபாய் ஹோட்டல்கள் உள்ளன. உடனே முன்பதிவு செய்திடுங்கள்!

அட்லாண்டிஸ் தி பாம் ஹோட்டல் & ரிசார்ட்

Atlantis Hotel, Kid Friendly Resorts in Dubai

இந்த அட்லாண்டிஸ் ரிசார்ட்டைப் பற்றி நிறைய சொல்லியாகிவிட்டது, ஒரு மாயம் நிறைந்த நீருக்கடியிலான உலகத்தைப் போன்ற தோற்றமளிக்கும், இந்த ஹோட்டல் ஒரு வாட்டர் பார்க் மற்றும் அண்டர்வாட்டர் அகுவாரியம் (நீருக்கடியிலான நீர்வாழ் விலங்குகள் காட்சியகம்) ஆகியவற்றுடன் முழுமைபெற்றுள்ளது. தனெக்கென சொந்தமாக 800 மீட்டர் நீள கடற்கரையைக் கொண்டுள்ள, அட்லாண்டிஸ் பாம் ஹோட்டல் & ரிசார்ட் குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான விஷயங்களைக் கொண்டுள்ளது. டென்னிஸ் மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு அறைகள் முதல் பல வித சமையல் வகைகளை அளிக்கும் உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், ஏரிக்கள் வரை ஒவ்வொருக்கும் பிடித்தமான எதையாவது இந்த அட்லாண்டிஸ் கொண்டுள்ளது. டால்பின்களுடன் நீச்சலடித்தல் அல்லது அக்வாவென்ச்சர் பார்க்கில் சாகச பயணங்களுக்கு போகுதல், அல்லது பல்வேறு டீன்ஸ் கிளப்புகளில் நண்பர்களை உருவாக்குதல் என்பது போன்ற பலவித செயல்பாடுகளுடன் அட்லாண்டிஸ் துபாய் பொழுதுபோக்கு அம்சத்தை முழுவதுமாக அள்ளிக் கொடுக்கின்றது.

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 30,508-லிருந்து துவங்குகிறது

இடம்: கிரசன்ட் சாலை – துபாய்

Book Your Stay at Atlantis Palms, DubaiBook Your Stay at Atlantis Palms, Dubai

ராடிசன் ப்ளூ ஹோட்டல் துபாய் டெய்ரா க்ரீக்

Radisson Blu Hotel, Kid Friendly Hotels, Dubai

துபாய் இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து வெறும் 15 நிமிட இடைவெளியில் உள்ள, ராடிசன் ப்ளூ ஹோட்டல் துபாய் டெய்ரா க்ரீக் தனித்துவமாக நகரத்தின் வணிக மையத்தில் அமைந்துள்ளது. இதனால் இது வணிகரீதியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கும், குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்றதாக இருக்கின்றது. ஸ்குவாஷ் கோர்ட்கள், நீச்சல் குளம், ஓட்டப்பந்தயம், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றுக்கான தனிப்பாதைகள் இருப்பதால் நீங்கள் டெய்ரா க்ரீக்கின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் குழந்தைகளும் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்த ஹோட்டல் உலகத்தின் பல்வேறு விதமான சமையல் வகைகளை வழங்கும் பல ரெஸ்டாரண்ட்களை கொண்டிருந்தாலும், யம் ரெஸ்டாரண்டில் உள்ள நூடுல்ஸ் ஃப்யூஷன் மீல்சை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறிக்கொள்கின்றது. இந்த ஹோட்டல் ஒரு ஆர்கேட் மற்றும் கிஃப்ட் ஷாஃப்பையும் கொண்டுள்ளது, இங்கே நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்ன கிஃப்ட் வாங்குவது என தேர்ந்தெடுப்பதில் நீங்கள் குழம்பிப் போகும் அளவிற்கு ஏராளமான பரிசுகள் நிறைந்துள்ளன.

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 7000-லிருந்து துவங்குகிறது

இடம்: பனியாஸ் சாலை, துபாய்

Book Your Stay at Radisson Blu Hotel Deira Creek DubaiBook Your Stay at Radisson Blu Hotel Deira Creek Dubai

தி வெஸ்டின் துபாய் மினா செயாகி பீச் ரிசார்ட் & மெரினா

The Westin Dubai, Kid Friendly Resorts in Dubai

முக்கிய இடமான ஜுமேரா பீச்சின் அருகே அமைந்துள்ள, தி வெஸ்டின் துபாய் மினா செயாகி & மெரினாவானது அழகான அரேபிய வளைகுடாவை பார்த்துக்கொண்டே ஓய்வெடுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றது. இந்த ரிசார்ட் விடுமுறையில் தங்கும் குடும்பத்தினரும் குழந்தைகளும் தங்களை புத்துயிரூட்டிக்கொள்வதற்காக ஒரு சிறப்பான சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, குழந்தைகள் தினசரி வெளியே போய் இடங்களை சுற்றிப் பார்த்தல் மற்றும் விளையாடுவதுடன் ஹோட்டலுக்கு உள்ளேயே அவர்களுக்கு பிடித்த ஏராளமான விஷயங்கள் உள்ளன. மணலில் வீடு கட்டுதல் மற்றும் நீச்சல் குளத்தில் குளித்தல் போன்ற கடற்கரை விளையாட்டுகளுடன், குழந்தைகளுக்கான கிளப்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பேபிசிட்டிங் சேவைகள் மற்றும் சாப்பிடும் பகுதிகளில் பிரத்யேகமாக குழந்தைகளுக்கான மெனுக்கள் என, வெஸ்டின் துபாய் ஹோட்டல் துபாய்க்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு சௌகரியமான சூழலைத் தருவதை உறுதிசெய்கின்றது.

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 17,000-லிருந்து துவங்குகிறது

இடம்: அல் சுஃபோ சாலை,  துபாய்

Book Your Stay at Westin Dubai Seyahi Beach ResortBook Your Stay at Westin Dubai Seyahi Beach Resort

பார்க் ரெஜிஸ் க்ரிஸ் கின் ஹோட்டல்

Park Regis, Kid Friendly Hotels in Dubai

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் பத்து நிமிட தூரத்தில் வசதியாக அமைந்துள்ள, பார்க் ரெஜிஸ் க்ரிஸ் கின் ஹோட்டல் ஆனது துபாய் அருங்காட்சியகம், புர்ஜுமான் ஷாப்பிங் மால், துபாய் மால் மற்றும் துபாய் உலக வர்த்தக மையம் ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல வழிவகுக்கின்றது. ஒரு மொட்டைமாடி நீச்சல் குளம், ஸ்டீம், நீராவிக் குளியல், ஜாகுஸி, மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றுடன், இந்த ஹோட்டல் சில நேர்த்தியான புத்துணர்ச்சி பெறும் வசதிகளுக்காக அங்கே தங்கும் விருந்தினர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பகல் நேரப் பயணங்கள் மிகவும் அசதியை அளிக்கும் என்பதால் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிற்சிகள் முதல் ஒரு ஜாகுஸி வரை பல்வேறு வகையான பொழுதுபோக்கு வசதிகளை அவர்கள் அனுபவித்து மகிழலாம்.

ஒரு சர்வதேச ரெஸ்டாரண்ட், ஒரு காஃபி லவுஞ்ச் மற்றும் ஒரு பில்லியர்ட்ஸ் மேசை ஆகியவைகள் மூலம், பார்க் ரெஜிஸ் க்ரிஸ் கின் ஹோட்டல் ஒரு கலைநயமிக்க முன்புறப் பகுதியைக் கொண்டுள்ளது, இறுதியாக ஹோட்டலின் கிளப் செவன் நைட்கிளப் லாபியை விட்டு வெளியேறாமலேயே உங்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றது.

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 7,500-லிருந்து துவங்குகிறது

இடம்: ஷேக் கலிஃபா பின் சயீத், அல் கரமா, புர் துபாய், துபாய் புர்ஜுமான் சென்டருக்கு எதிரில்

Book Your Stay at Park Regis Kris Kin HotelBook Your Stay at Park Regis Kris Kin Hotel

மெஜெஸ்டிக் ஹோட்டல் டவர் துபாய்

Majestic Hotel Tower, Kid Friendly Hotels in Dubai

மெஜெஸ்டிக் ஹோட்டல் டவர் துபாய் தங்கும் அனுபவம் மற்றும் வசதிகளைப் பொறுத்த வரை அதன் பெயருக்கு ஏற்றாற் போல் அளிக்கின்றது. குழந்தைகள் வெளிப்புற நீச்சல் குளத்தில் குதித்து நீரில் விளையாட மிகவும் விரும்புவார்கள், அதே சமயம் நீங்கள், சன் டெரஸ், சவுனா மற்றும் ஸ்டீம் சென்டர்களில் பொழுதை இனிமையாகக் கழிக்கலாம். ஹோட்டல் விருந்தினர்களுக்கு ஒரு கிரேக்க அடையாளத்தைக் கொண்டிருக்கும் ரெஸ்டாரண்டான எலியா, மற்றும் தன் சிறப்பான காலை பஃப்பெட் உணவுக்கு பெயர்போன டிர்குவாஸ் போன்றவைகள் மூலம் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றது. கடற்கரையை நேசிப்பவர்கள் ஒரு பிரத்யேக அனுபவத்தை பெறுவார்கள் – மெஜெஸ்டிக் ஹோட்டல் டவர் துபாய் ஆனது துபாயின் மிகவும் சிறந்த கடற்கரைகளில் பெரும்பாலானவைகளுக்கு இலவச ஷட்டில் பஸ் சேவையை வழங்குகின்றது.

இடம்: ப்ளாட் எண் 317-106, மங்கூல் சாலை, அல் மங்கூல், புர் மங்கூல், புர் துபாய் - துபாய்

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 6,000-லிருந்து துவங்குகிறது

Book Your Stay at Majestic Hotel Tower DubaiBook Your Stay at Majestic Hotel Tower Dubai

ஹில்டன் கார்டன் இன் துபாய் அல் மினா

Hilton Garden AL Mina, Kid Friendly Hotels in Dubai

போர்ட் ரஷீத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், ஜுமேரா கடற்கரை, துபாய் அருங்காட்சியகம் மற்றும் ஹெரிடேஜ் வில்லேஜ் போன்ற முக்கிய இடங்களுடன் ஒரு அற்புதமான இணைப்பை வழங்குகின்றது. இதனால் ஹில்டன் கார்டன் துபாய் அல் மினா ஒரு பிரபலமான தங்குமிடமாம். உணவு மற்றும் பானங்களுக்காக, கார்டன் கிரில் அண்ட் பார், தி பெவிலியன் பண்ட்ரி, மற்றும் கார்டன் பார் ஆகிய மூன்று மாறுபட்ட தேர்வுகள் மூலம் விருந்தினர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப சுவைத்து மகிழலாம். ஒரு மொட்டை மாடி நீச்சல் குளம் புர்ஜ் கலிஃபா உள்ளிட துபாயின் வானாளவிய கட்டமைப்புகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பை அளிக்கின்றது. நீங்கள் வானுயர்ந்து நிற்பவைகளை கண்டு ரசிக்கும்போது குழந்தைகளும் நீச்சல் குளத்தில் விளையாடி சந்தோஷமடையலாம். உடற்பயிற்சி மையங்கள், மற்றும் பொழுதுபோக்குப் பகுதிகள் உள்ளிட்ட மற்ற பொழுதைக் கழிக்கும் வசதிகளும் உள்ளன. இவையெல்லாம் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க கட்டணத்தில் கிடைக்கின்றன, இது ஹில்டன் கார்டன் இன் துபாய் அல் மினாவை குடும்பத்துடன் வரும் பயணிகளுக்கு பிடித்தமான ஒன்றாக ஆக்கியுள்ளது.

இடம்: அல் மினா சாலை, துபாய்

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 5,168-லிருந்து துவங்குகிறது

Book Your Stay at Hilton Garden Al Mina DubaiBook Your Stay at Hilton Garden Al Mina Dubai

ஜுமேரா பீச் ஹோட்டல்

Jumeirah Hotel, Kid Friendly Hotels in Dubai

ஜுமேரா பீச் ஹோட்டலில் உங்களைக் கவரும் முதல் விஷயம் அதன் அற்புதமான கட்டிடக்கலையாகும். ஒரு பெருநிறுவன தலைமையகம் மற்றும் ஒரு விண்வெளி மையம் ஆகியவற்றின் கலவையாக தோற்றமளிக்கும், ஜுமேரா பீச் ஹோட்டல் உடனடியாக உங்கள் புருவங்களை உயர்த்த வைக்கும். தொடர்ந்து உள்ளே சென்றால் நீங்கள் கொடுக்கும் விலைக்கு அந்த இடம் ஏற்றதுதான் என உங்களுக்கு தெரிய வரும். பொழுதுபோக்கு வசதிகள், தங்கும் வசதிகள், சேவைகள் மற்றும் அருகிலுள்ள வசதி ஆகியவை இங்கே உங்களின் பரந்த கற்பனை ஆசைகளைக் கூட உண்மையாக நடக்க வைக்கும். தனிப்பட்ட மணற்பாங்கான வெள்ளை கடற்கரைகளில் துள்ளி விளையாடுவதாக இருந்தாலும் சரி, டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் கோர்ட்களில் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது சுவற்றில் ஏறுதல் மற்றும் வாட்டர் பிளே பகுதிகள் உடனான குழந்தைகள் கிளப்களில் நேரம் செலவழிப்பதாக இருந்தாலும் சரி, இங்கே குழந்தைகள் கொண்டாட ஏராளமான விஷயங்கள் உள்ளன. இந்த ஹோட்டல் இசை மற்றும் சிறப்பு டிஜே இரவுகள் போன்ற மனம் மயங்கும் அனுபவங்களுக்காக ஒரு யூத் ஆக்டிவிட்டி சென்டரையும் கொண்டுள்ளது. ஹோட்டலில் தங்கும் அனுபவத்துடன் 17 வகையான உணவு வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

இடம்: ஜுமேரா பீச்

விலை: இரவு ஒன்றுக்கு ரூ. 21,000-லிருந்து துவங்குகிறது

Book Your Stay at Jumeirah Beach HotelBook Your Stay at Jumeirah Beach Hotel