மிகிழ்ச்சியை அனுபவியுங்கள்: இந்தியாவிலுள்ள 4 வெளிநாட்டு அனுபவங்கள்

Pallavi Siddhanta

Last updated: Sep 24, 2019

Want To Go ? 
   

இந்தியா 16 ஆம் நூற்றாண்டிலிருந்து சுதந்திரம் பெறும் வரை, வெளிநாட்டு பேரரசுகளினுடைய குடியேற்றங்களின் தாயகமாக திகழ்ந்தது. நம் நாட்டில் இருந்த மதிப்புகள், செல்வாக்கு மற்றும் கலாச்சாரம் இன்றும் கூட இந்த பகுதிகளில் உள்ளன. நீங்கள் உண்மையான போர்த்துகீசிய அல்லது பிரஞ்சு அனுபவத்தை காண வேண்டுமென விரும்புகிறிரீர்களா, ஆனால் இந்த அனைத்து இடத்தையும் காண்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லை என்றால் இந்தியாவில் உள்ள குடியேற்றங்களை காணுங்கள். நீங்கள் ஏமாற்றம் அடையமாட்டீர்கள்!

பாண்டிச்சேரி செல்லுங்கள்

பிரஞ்சு அனுபவம்

Pondicherry, Foreign Experiences in India

 

1954 வரை பாண்டிச்சேரி பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது, மற்றும் இன்று வரை காலனித்துவ பிரான்சின் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. பிரஞ்சு கட்டிடக்கலை, பிரஞ்சு உணவு, பிரஞ்சு அத்தியாவசிய பொருட்களுக்கான ஷாப்பிங்- முதலியவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வெள்ளை பங்களாக்களுடன் பிரகாசமான அரக்கு நிறமுடைய வெளிப்புற சுவர்களில் பலவண்ணங்களை கொண்டுள்ளது,  கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள பாண்டிச்சேரியின் பிரஞ்சு குடியிருப்புகளில் போகெய்ன்வில்லே தளிர் விடுவது முதலிய அம்சங்களை காணலாம். ஆரோவில்லே பாண்டிச்சேரியின் முதன்மை இடங்களில் ஒன்றாகும், சிட்டி ஆஃப் டான் எனவும் அறியப்படுகிறது, பிரஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் மூலம் வடிவமைக்கப்பட்டது மற்றும் பாண்டிச்சேரியினுள் அமைந்துள்ள ஒரு சிறு-நகரத்தையும் போன்றது. இயேசுவின் பிறப்புக் கதையை சொல்லும் சுவரோவியங்கள் மற்றும்  கண்ணாடி படிந்த ஜன்னல்கள் கொண்டு இயேசுவின் புனித இருதயத்தின் தேவாலயம், கோதிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் பேக்கரிகள் இன்னும் பௌலங்கெரிஸ் என அழைக்கப்படுகின்றன, மற்றும் உங்கள் மனதை திருடும் மிருதுவான கிரிப்ஸ் வழங்கப்படுகின்றன.

பாண்டிச்சேரியிலுள்ள அதன் அனைத்து பெருஞ்சிறப்பை அனுபவிப்பதற்கு இங்கே சில வாரங்களை செலவிடுட்டு, நகரத்தை நெருக்கமாக காணுங்கள். பாண்டிச்சேரி உலாவும் சாலை மற்றும் பிரஞ்சு பகுதிகளில் அமைந்துள்ள கூழாங்கள் சாலையில் சைக்கிள் சவாரி செய்த அனுபவத்தை எப்போதும் மறக்க மாட்டீர்கள்.

Book Your Flight to Chennai Now!

கோவாவிற்கு செல்லுங்கள்

ஒரு போர்த்துகீசிய வாழ்க்கையின் பாணி

se-cathedral-goa

ஆஹா, கோவா. 1510-1961 போர்த்துகீசிய குடியேற்றம், எழில் கொஞ்சும் கோவாவை 450 ஆண்டு காலம் போர்த்துகீசியர்கள் ஆட்சி புரிந்தனர். கோவாவிலுள்ள போர்த்துகீசிய வரலாறு மற்றும் அதன் செல்வாக்குகள் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களைப் போன்று இருந்தது. விந்தையான சாலைகள், பழைய போர்த்துகீசிய மாளிகைகள் மற்றும் பிரமாண்ட தேவாலயங்கள், கோவாவில் இருந்த போர்த்துகீசியர்களின் நம்பிக்கைகளை நினைவூட்டுகிறது. போர்த்துகீசியர்கள் மூலம் கட்டிய செயின்ட். கஜேட்டன் தேவாலயம் மற்றும் செயின்ட் அகஸ்டின் தேவாலயம் சேதமடைந்த நிலையில் இன்றும் பெரிய அளவில் கவரக்கூடிய தேவாலயங்களைப் போல கம்பீரமான நினைவூட்டல்களை தருகிறது. செயின்ட். கேத்ரின் தேவாலயத்தின் போர்த்துகீசிய உணர்வை கண்டிப்பாக காண வேண்டும்,  போர்த்துகீசியர்கள், முதல் தேவாலயத்தை இங்கே கட்டினார்கள். அவர்களின் போர்த்துகீசிய கட்டிடக்கலையில் அனைத்து கூறுகளும் அருமையாக இருக்கும், குறிப்பாக கதவுகள் மற்றும் ஜன்னல்கள், பார்த்துக்கொண்டே இருக்கக்கூடிய கோவாவின் வீடுகள். போர்த்துகீசிய குடியரசின் பாதைகள் மூலம் அரக்கு முதல் ஊதா நிறம் வரை மற்றும் இளஞ்சிவப்பு முதல் இளம்பச்சை வரை வண்ணமிகு வெளிப்புற வண்ணத்தட்டுக்கள், அற்புதமான உணர்வுகளை தருகிறது. நீங்கள்  போன்டைன்ஹஸ் கிராமத்தின் சில வசீகரமான பழைய போர்த்துகீசிய வீடுகளை பார்க்கலாம்.

பரிந்துரைகள்: காசா அரவுஜோ ஆல்வரேஸ் என அறியப்படும் 250 வருட பழமையான போர்த்துகீசிய பாணியில் கட்டப்பட்ட மாளிகையை காணுவதற்கு, போண்டா நகரத்திற்கு அருகேவுள்ள லோட்டோலிமிற்கு செல்லுங்கள், போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தின் போது அவர்களின் குடும்பங்கள் எப்படி வாழ்ந்தன என்பதை காணுங்கள். இந்த மாளிகையின் மரச்சாமான்கள், பாத்திரங்கள், அலங்காரத்தின் தோற்றத்தை காணுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதியுள்ளது மற்றும் மேலும்.

Book Your Flight to Goa Now!

டிராங்குபாருக்கு செல்லுங்கள்

பண்டைய காலத்தின் பழமையான டானிஷ் காலனியை கண்டுகளியுங்கள்

Tranquebar, Danish Experience

 

1620, டிராங்குபாரின் ஆரம்பத்தில் டானிஷ் மூலம் குடியேற்றப்பட்டது  பிறகு டச்சு கிழக்கு இந்திய கம்பெனி மூலம் கையகப்படுத்தப்பட்டது. இருநூறு ஆண்டு பழமைவாய்ந்த டவுன் கேட் கட்டப்பட்ட டானிஷ் நகரத்தில் நீங்கள் நுழைந்த உடனே கவரக்கூடிய நகரின் பழங்கால வரலாற்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். முக்கிய நகரங்கள் கிங்ஸ் ஸ்ட்ரீட், குயின்ஸ் ஸ்ட்ரீட் என அழைக்கப்படுகிறது மற்றும் டிராங்குபாரில் அட்மிரல் ஸ்ட்ரீட் பழைய நாட்களின் கதையை கூறுகிறது. டானிஷின் தொல்பொருட்கள் அருங்காட்சியகமாக அதன் வீடு மற்றும் பழைய காலனித்துவ வீடுகள் பற்றியும் டானிஷ் கோட்டையை பற்றியும் கூறுகிறது. டானிஷ் பேஸ்ட்ரி இந்த நகரத்தில் கிடைப்பது கடினம், ஆனால் கடல் வகை உணவுகள் டிராங்குபாரில் சுவையாக இருக்கும். டிராங்குபார் 'தரங்கம்பாடி' எனவும் அழைக்கப்படுகிறது, அதாவது தமிழில் பாடும் அலைகளின் நிலம். மறக்கப்பட்ட காலனித்துவ நகரத்தின் பேரின்பத்தை அனுபவிப்பதற்கு நீங்கள் ஆற்றில் அமர்ந்து காற்றை ரசிக்கலாம்.

Book Your Flight to Chennai Now!

டாமனுக்கு செல்லுங்கள்

அழகிய போர்த்துகீசிய கனவில் வாழ்வதற்காக

The Old Portuguese Colony, Daman

1961, இந்தியப் பிரதேசமாக போர்த்துகீசியரிடம் இருந்து விடுபட்டது, போர்த்துகீசியர்களின் கலாச்சாரம், செல்வாக்கு டாமனில் மிகுந்திருந்தது. டாமன் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது - மோட்டி டாமன் மற்றும் நானி டாமன். நானி டாமன், அல்லது டாமனின் சிறிய பகுதியில், டாமனின் சுற்றுலா மேம்பாட்டு - உணவகங்கள் மற்றும் தங்குமிடம் உள்ளன. மோட்டி டாமன், அல்லது பெரிய டாமன் ஒரு சிறிய நகரமாகும், அங்கு மோட்டி டாமன் பாதுகாப்பு அரண் உள்ளது. இரண்டு தேவாலயங்கள், செயின்ட பாலின் தேவாலயம், மற்றும் வண்ணமயமான கண்ணாடியின் உட்புறங்கள் மற்றும் கடினமான வேலைப்பாடுடைய சிற்பங்களை உள்ளே கொண்டுள்ளன, போர்த்துகீசிய பாணி கட்டிடக்கலையில் கதீட்ரல் ஆஃப் பான் ஜீசஸ் கட்டப்பட்டது. கடற்கரையை நிலவொளியில் ரசிக்கும் நபராக நீங்கள் இருந்தால் டாமனிலுள்ள கலங்கரை விளக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஒரு சில உணவகங்களில் சுவையான போர்த்துகீசிய உணவும் கிடைக்கும்!

Book Your Flight to Mumbai Now!

More Travel Inspiration For Pondicherry