இந்தியாவில் முதல் ஐந்து இடத்தில் உள்ள கடற்கரை ஓய்விடங்கள்

Chandana Banerjee

Last updated: Jun 15, 2017

Want To Go ? 
   

கோவாவிற்கு  சென்று அலுத்துவிட்டதா? உங்கள் கடற்கரை சுற்றுலாவைக் கழிக்க வேறு ஏதாவது இடத்திற்கு செல்லவேண்டும் போல் உள்ளதா? சராசரியான அம்சங்களிலிருந்து சற்றே வேறுபட்ட இந்த ஐந்து சொகுசு கடற்கரை ஓய்விடங்களையும் அறியவும்.  குளிர்கால இடைவெளிக்கு இது மிகவும் சிறந்தது. சூரியன் முத்தமிடும் கடற்கரைகள், நீலவானம் கொண்ட கடல்கள் மற்றும் சாகசத்தையும் சுகவாழ்கையையும் ஒருங்கிணைக்கும் பயணம் ஆகியவற்றை இவை அளிக்கின்றன.

              

நீம்ரானாவின் தி பங்களா ஆன் தி பீச், டிராங்குபார் (தரங்கம்பாடி)

 

யுஎஸ்பி: வரலாற்று பின்னணி அமைந்த ஆடம்பரமான கடற்கரை சொத்து

 

இந்த அழகான கடற்கரை, ஒரு வரலாற்று மாணிக்கம். தேனிலவிற்குச் செல்பவர்களுக்கும் முதுகுப் பையை சுமந்து செல்பவர்களுக்கும் இது ஒரு சொர்க்கம். இந்த இடமானது பாரம்பரிய நாகப்பட்டின முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு எட்டு பெரிய காற்றோட்டமான இடங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்ட டச்சுக் கப்பல்களின் பெயர்கள் இந்த விடுதியில் உள்ள அறைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன. இங்கு அலங்காரமான பொருட்களும் கண்கவர் பர்னிச்சர்களும்  நிறைந்துள்ளன. தரங்கம்பாடியின் வரலாற்று நினைவுகளை பயணிக்கு அளிக்கும் வகையில் இங்குள்ள அறைகள் வரலாற்றையும் வசதியையும் இணைத்துள்ளன. இங்குள்ள விருந்தினர்கள் இதற்கு அருகில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்குச் செல்லலாம். இந்தத் தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தலாம். ஓசோன் வசதி கொண்ட இந்த இடத்தில் புத்துணர்ச்சி பெறலாம். உள்ளூர் மீனவர்களுடன் படகு சவாரி செய்யலாம். இந்த புராதனமான கடற்கரையில் சூரிய ஒளியில் மூழ்கடியுங்கள். பின் வரும் விடுமுறைக்கு இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

விலை: ரூ.6,500 லிருந்து துவங்குகிறது.

 

இடம்:  தி பங்களா ஆன் தி பீச், 24 கிங் ஸ்டீரிட், தரங்கம்பாடி 609313, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு.

 

 

தி லீலா, கோவலம்

 

யுஎஸ்பி. இந்தியாவின் ஒரே பாறை உச்சி ஓய்விடம்

leela-kovalam-beach-resorts-in-india

செங்குத்துப் பாறையின் உச்சியில் கண்கவர் எழிலுடன் அமைந்துள்ள கடற்கரை ஓய்விடம் தி லீலா. இது மூச்சு திணறடிக்கும் அரபிப் பெருங்கடலின் அழகிய காட்சிகளை இருந்த இடத்திலிருந்தே கண்டு களிக்க உதவுகிறது. கடற்கரையில் கால் வைக்கவும் உதவுகிறது. இந்த விடுதியில் அழகிய தோட்டம் உள்ளது. கடலைக் காணும் வகையில் அறைகள் உள்ளன. பணியாளர் சேவையுடன் சொகுசான அறைகள் உள்ளன. தனித்துவமான க்ளப் ஸ்பாவும் ஜிம்நாசியமும் உள்ளன. பாரம்பரிய கேரள பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 நவீன வசதிகளுடன், உல்லாசத்தையும் நவ நாகரிகத்தையும் ஒருங்கே இணைத்து இங்குள்ள அறைகள் உள்ளன. இங்கு, உள்ளேயே உள்ள தனித்துவமான ஆயுர்வேத ஸ்பா உள்ளது. பண்டைய பாரம்பரிய ஒருங்கிணைந்த சிகிச்சைகளை அளித்து உங்களது மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கின்றது. பல்வேறு விதமான மதுபான அருந்தகங்கள், காபி அருந்தகங்கள், உணவகங்கள் ஆகியவை உள்ளன. இன்பமூட்டும் உள்ளுர் உணவு வகைகளை சுவைத்துப் பார்க்கலாம்.

 

விலை: ரூ. 11,500லிருந்து துவங்குகிறது

 

இடம்: கோவலம் பீச் ரோடு, கோவலம் பீச், திருவனந்தபுரம், கேரளா 695 527.

 

தி கோல்டு பீச் ரிசார்ட், டாமன்

 

யுஎஸ்பி. இதுவரை காணாத அமைப்பில் கவர்ச்சிகரமான கடல் பார்வைகள் 

Gold-Beach-Resort-Beach-resorts-in-india

நவநாகரிகமான சொகுசான தங்குமிடம், அரபிக்கடலை நோக்கிக்கொண்டு டாமனின் தேவ்கா பீச்ஃப்ரண்டில் இந்த அமைதியான தி கோல்டு பீச் ரிசார்ட் உள்ளது. டேவ்கா கடற்கரையின் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இது படர்ந்துள்ளது. மிகவும் உன்னதமான சேவைக்கும் அற்புதமான உணவுக்கும் பெயர்போன தங்குமிடம். இங்கு டீலக்ஸ்(சொகுசான) மற்றும் சூப்பர் டீலக்ஸ் அறைகளும் சொகுசான சிற்றறைகளும் உள்ளன. 600 சதுர அடி பரப்பளவில் சிற்றறைகள் உள்ளன. ஒவ்வொரு  அறையிலும் ஒரு வரவேற்பறை, ஒரு உணவருந்தும் அறை ஆகியவை உள்ளன. ஜக்கூசி பாணி குளியல்தொட்டி உள்ளது. நீண்ட, சுகமான விடுமுறைகளுக்கு ஏற்றது.

                          

விலை: ரூ. 7,000 லிருந்து துவங்குகிறது

 

இடம்: ப்ளாட் எண். 2/ 1-பி, 2/1-சி, தேவ்கா பீச் சாலை, மார்வாட். நானி டாமன்.

 

 

மேஃபேர் வேவ்ஸ், புரி

 

யுஎஸ்பி.  அற்புதமான சொகுசான வாழ்க்கையில் சுற்றி அமைக்கப்பட்ட ஆத்ம ரீதியான அனுபவம்  

Mayfair Waves Puri, Beach-resorts-in-india

புரியில் அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள மற்றொரு அழகிய ஓய்விடம் மேஃபேர் வேவ்ஸ். ஜகன்நாதர் கோவிலில் இறைவனை வழிபடுவதற்காகவோ அல்லது ஒரு காதல் மயமான தேனிலவைக் கழிக்கவோ இந்த புனிதஸ்தலத்திற்கு பயணிகள் வருகிறார்கள். நவநாகரிக பாணியில் அவர்களுக்கான ஓய்விடத்தை இந்த விடுதி அளிக்கிறது. ஸ்பா, உடற்பயிற்சி மையம், பல்வகை உணவு அளிக்கும் உணவகம், ஆகியவற்றுடன் கடலில் கால் நனைக்க விரும்புபவர்களுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பு கவசத்தையும் இந்த விடுதி அளிக்கிறது. ஜகன்நாதர் கோவில் இறைவனை தரிசிக்க விரும்பும் விருந்தினர்களுக்கு இந்த விடுதியிலேயே உள்ள  புரோகிதர் வழிகாட்டி அழைத்துச் செல்கிறார்.

 

விலை: ரூ.13,000 லிருந்து துவங்குகிறது.

 

இடம்: ப்ளாட் எண் 122, 124, 125, சக்கர தீர்த்த சாலை, புரி, ஒடிசா 752002

 

 

ஹேவ்லாக்கில் உள்ள பேர்ஃபூட், அந்தமான்

 

யுஎஸ்பி: அமைதியான கடற்கரை, பசுமையான காடு மற்றும் பரவசமூட்டும் சாகசங்கள் அனைத்தும் ஒரு சேர கிடைக்கின்றன.  

Barefoot at Havelock, Beach-resorts-in-india

அடர்த்தியான காடுகள், வெள்ளை நிற கடற்கரைகள், அதே வெளியில் நீலபச்சை நிற கடல், அமைதியான கூரைவேயப்பட்ட  குடில்கள் ஆகிவை இந்த அழகிய நிலத்தை ஆக்கிரமிக்கின்றன. பேர்ஃபுட் அட் ஹேவ்லாக்கானது அந்தமானில் அழகிய கடற்கரையோர காட்டுப்பகுதியில் உள்ள விடுதி. இங்கு இணையத் தொடர்பு இல்லாமல் இயற்கையுடன் இணைந்த வாழ்வு உத்தரவாதமாகிறது. 31 கூரைவேயப்பட்ட கூடாரங்கள், குடில்கள், மாடிவீடுகள் ஆகியவை இங்கு கிராமப்புற எழிலையும் நவீன வசதிகளையும் ஒரு சேர இணைத்து அளிக்கிறது.

இந்த சுற்றுச்சுழலுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்ட்ட  இந்த விடுதியானது அபிரிமிதமான சாகசங்களை, உங்களது வாசலிலேயே அளிப்பதாக உறுதி பூண்டுள்ளது. இயற்கையுடன் இணைந்த நடைபயணமோ, அல்லது தலைகப்புற அடித்து விழும் நீச்சல் விளையாட்டோ, ஸ்னோர்கெல்லிங், கயாகிங் போன்ற சாகசங்களோ, எதுவாக இருந்தாலும் விருந்தினர்கள் பெறுவதற்கு ஏராளமான சந்தோஷங்கள் இங்கு உள்ளன. ஸ்பாவில் நீங்கள் ஓய்வெடுக்கலாம். தீவில் உற்பத்தியாகும் பொருட்களை வைத்து சமைக்கப்பட்ட புதுவிதமான உணவை உணவகங்களில் சரிபார்க்கலாம்.

 

விலை. ரூ.9,500 லிருந்து துவங்குகிறது.

 

இடம். கடற்கரை எண்.7, ரேதாநகர் கிராமம், ஹேவ்லாக் தீவு, அந்தமான் தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் 744 211

 

இந்த ஐந்து சொகுசான கடற்கரை விடுதிகளையும் நீங்கள் கண்டறியலாம். சூரியன் பூர்த்தி செய்த இந்த விடுமுறையை கழிக்க நீங்கள் திட்டமிடுங்கள். 2016ஆம் ஆண்டை சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்.