உங்கள் குழந்தைகள் விரும்பக்கூடிய 10 சிங்கப்பூர் ஹோட்டல்கள்

Chandana Banerjee

Last updated: Jun 15, 2017

Want To Go ? 
   

கடைத்தெருவிற்கு செல்வதற்கென்று பல்வேறு இடங்கள், வியக்க வைக்கும் அருங்காட்சியகங்கள், கேளிக்கை பூங்காக்கள், பட்ஜெட்டிற்கு இணக்கமான ஹோட்டல்கள் என்று குழந்தைகளுடன் குடும்ப சுற்றுலா செல்வதற்கு ஏற்ற விடுமுறை இடம் சிங்கப்பூர். நீங்கள் சிங்கப்பூருக்கு உங்கள் டிக்கெட்டுகளை எடுத்த பிறகு, எங்கு தங்குவது என்று தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், இந்த நகரத்தில் உள்ள உயர் தரமான குழந்தைகள் விரும்பும் ஹோட்டல்களின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் ஹோட்டல்

சிங்கப்பூரின் கடைத்தெரு மற்றும் பொழுதுபோக்கு மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டல் ஆர்ச்சர்ட் ஹோட்டல். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன், பேரங்காடிகள், அருங்காட்சியகங்கள் அல்லது கேளிக்கைப் பூங்காக்கள் என்று செல்ல வேண்டுமென்றால்  அதற்காக தங்க வேண்டிய இடம் இந்த ஹோட்டல். இங்குள்ள ஆசிய பாணி அறைகளில் உங்கள் தனிமையை கழிக்க  விரும்பினால், சற்று கூடுதல் கட்டணம் செலுத்தினால், உங்கள் குழந்தைகளைப் பராமரிக்க சேவைகள் வழங்கப்படும்.

உங்கள் குழந்தைகளை கவனமாக சேவகர்கள் பார்த்துக்கொள்ளும்போது நீங்கள் உடற்பயற்சி செய்யலாம். இங்குள்ள குளத்தில் நீந்தலாம். அல்லது சற்று காலார நடந்துவரலாம். உங்கள் குழந்தைகளுக்கான சன்மான பை ஒன்றையும் இந்த ஹோட்டல் அளிக்கிறது. இதில் படம் வரையும் புத்தகங்கள், ரேயான்கள், குளிப்பதற்குத் தேவையான பொருட்கள் ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பிசியாக இருப்பார்கள். உங்கள் அறையிலேயே நீங்கள் உணவு உண்ணும் வசதியும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் அவர்களது வசதிக்கேற்ப உணவு உண்ணும் முறையும் வழங்கப்படுகிறது.

விலை. ஓர் இரவிற்கு ரூ.10,512லிருந்து துவங்குகிறது.

இடம். 442 ஆர்சர்ட் ரோடு, சிங்கப்பூர், 238879, சிங்கப்பூர்        

Book Your Stay at Orchard HotelBook Your Stay at Orchard Hotel

ஃபுராமா ரிவர்ஃப்ரண்ட் 

Furama-riverfront

சைனாடவுன் மற்றும் ஆர்சர்ட் ரோடிற்கு இடையில் அமைந்துள்ளது ஃபுராமா ரிவர்ஃப்ரண்ட் சிங்கப்பூர். நீங்கள் குழந்தைகளுடன் பயணித்தால் அவசியம் தங்க வேண்டிய இடம் இது. எல்லா ஹோட்டலையும் போல வசதிகள் இருந்தாலும், குடும்ப அறைகள், கருத்து அறைகள் என்று இந்த இடத்தை சுவையாக்க பல்வேறு இடங்கள் உள்ளன.

குழந்தைகளுக்கு பிரியமான வசதிகளுடன் மடக்கு படுக்கைகள், எக்ஸ்பாக்ஸ் முனையங்கள், என்று இந்த வண்ணமிகு அறைகள் குழந்தைகளை சீராட்டி இரவு முழுவதும் சினிமாவும் விளையாட்டுக்களும் வழங்கி அவர்களுக்கு மகிழ்வூட்டும். இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கென்று தனி பகுதி உள்ளது. அங்கு அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கலாம், பல்வேறு தாள்களில் கை நுணுக்க வேலைகள் செய்யலாம். பொம்மைகளுடன் விளையாடலாம். இந்த ஹோட்டலுக்கு உள்ளேயே இருக்கும் உணவகத்தில் அமைதியாக உணவு உண்ணலாம்.

விலை. ஓர் இரவிற்கு ரூ.8,136 லிருந்து துவங்குகிறது.

இடம். 405 ஹேவ்லாக் ரோடு, சிங்கப்பூர், 169633

Book Your Stay at Furama RiverfrontBook Your Stay at Furama Riverfront

பெராக் ஹோட்டல்

சிங்கப்பூரின் சிறந்த பட்ஜெட் ஹோட்டல்களுள் ஒன்று பெராக் ஹோட்டல். மிகவும் சுவையாக அலங்கரிக்கப்பட்டுள்ள இடம் இது.  லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அழகான இடம் இது. விருந்தினர்களுக்காக 35 அழகிய அறைகள் உள்ளன. 5 வயதிற்கு  உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் கிடையாது. புகிஸ் சந்திப்பிலிருந்து இந்த ஹோட்டல் 5 நிமிடங்களில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. புகிஸ் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள மாபெரும் அங்காடிகளில் ஒன்று. இது முஸ்தஃபா மையத்திற்கும் சிட்டி ஸ்கொயர் மாலுக்கும் அருகில் உள்ளது.

விலை. ஓர் இரவிற்கு ரூ. 3,711 லிருந்து துவங்குகிறது.

இடம். 12 பெராக் ரோடு, சிங்கப்பூர், 208133 

Book Your Stay at Perak HotelBook Your Stay at Perak Hotel

ஹோட்டல் 81 டிக்சன்

hotel-81-dickson

மிகவும் சிக்கனமாக தங்களது பட்ஜெட்டிற்குள் ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும், அதே சமயம் சொகுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பயணிகளுக்கு லிட்டில் இந்தியாவில் உள்ள ஹோட்டல் 18 டிக்சன், சிறந்த தேர்வு. இது முஸ்தஃபா மையத்திற்கும் சிட்டி ஸ்கொயர் மாலுக்கும் அருகில் 5 நிமிடம் நடக்கும் தொலைவில் உள்ளது. இந்த இரண்டு கடைத்தெருக்களும் எல்லா வயதினருக்கும் பிடித்தமான கடைத்தெருக்கள். சிங்கப்பூரின் மற்ற கவர்ச்சிகளான சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம், கார்டன்ஸ் பை  தி பே, காம்போங் க்ளாம், சன்டெக் சிட்டி மால் ஆகியவை இந்த ஹோட்டலிலிருந்து வெறும் 15 நிமிட தொலைவில் உள்ளன. உயர் வேக வைஃபை, சூடான பானங்கள் உருவாக்கும் வசதி, குளிர்சாதன வசதி மிக்க அறைகள் என்று உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் ஹோட்டல் 81 டிக்சனில் கிடைக்கும்.

விலை. ஓர் இரவிற்கு ரூ.3,337லிருந்து துவங்குகிறது.

இடம். 3 டிக்சன் ரோடு,  சிங்கப்பூர், 209530

Book Your Stay at Hotel 81 DicksonBook Your Stay at Hotel 81 Dickson

தி ஃபுல்லர்டன் ஹோட்டல்

உங்கள் சிங்கப்பூர் விடுமுறை வரலாற்றின் சாரம் பெற வேண்டுமென்றால், மகத்துவமான ஃபுல்லர்டன் ஹோட்டலில் தங்குங்கள். 1928ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹோட்டலே ஒரு தேசிய நினைவுச் சின்னம். ஒரு காலத்தில் சிங்கப்பூரின் பொது தபால் அலுவலகம், பரிமாற்ற ஆலோசனை நூலகம், பரிமாற்ற அறை ஆகியவை இங்கு இருந்தன. இன்று, இந்த மாபெரும் கட்டிடத்தில் 400 அறைகொண்ட ஐந்து நட்சத்திர பாரம்பரிய ஹோட்டல் உள்ளது. இது மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ரஃபேல்ஸ் ப்ளேஸ் எம்ஆர்டி நிலையம் மற்றும் ஆர்ச்சர்ட் ரோடிலிருந்து இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் மட்டும் உள்ளது. உங்களது குழந்தைகளை பிசியாக வைத்துக்கொள்ள தி ஃபுல்லர்டன் பாரம்பரிய நடைபயணம், கடல்சார் சுற்றுலா, நினைவிடச் சுற்றுலா ஆகிய நடவடிக்கைகளை வழக்குகிறது.

விலை. ஓர் இரவிற்கு ரூ.15,416 லிருந்து துவங்குகிறது.

இடம்.  ஃபுல்லர்டன் ஸ்கயர், சிங்கப்பூர் 049178

    Book Your Stay at The Fullerton HotelBook Your Stay at The Fullerton Hotel

வி ஹோட்டல் லாவண்டர் 

v-hotel-lavender

லாவண்டர் மெட்ரோ நிலையத்திலிருந்து சிறிய நடைபயண தூரத்தில் உள்ள இந்த ஹோட்டல் கல்லாங் பகுதியில் ஜெல்லிகோ சாலையில் அமைந்துள்ளது. தி அலைவ்  அருங்காட்சியகமானது  இந்த ஹோட்டலில் இருந்து 5 நிமிட தொலைவில் உள்ளது. எம்ஆர்டியும் இதற்கு அருகில் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் சிங்கப்பூர் முழுவதையும் அதிசயிக்காமல் சுற்றிப்பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளுடன் இந்த நகரை சுற்றிப்பார்க்க விரும்பினால், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது இங்கிருந்து மிகவும் எளிது. இந்த ஹோட்டலைச் சுற்றியே உங்கள் குழந்தைகள் உல்லாசமாக இருக்க விரும்பினால், இங்கு 12 இன்ச் உள்ள பிசாக்கள் (Pizzas), ரிகார்ட்ஸ் எனப்படும் உள்ளக காபியகம் ஆகியவை உள்ளன. இங்கு குழந்தைகள் விரும்பும்போது  நன்கு சுவையான பிசாக்கள்(Pizzas) கிடைக்கும். வி ஹோட்டல் லாவண்டரில் உள்ள அறைகள் நன்கு இதமாக உள்ளன. சிறந்த சேனல்களை கொண்டுள்ள எல்இடி டிவி, சிறிய குளிர்சாதனப் பெட்டி (உங்கள் குழந்தைகளுக்காக எதையாவது நீங்கள் குளிருடன் வைக்க விரும்பினால்), உயர் வேக வைஃபை ஆகியவை உள்ளன.

விலை. ஓர் இரவிற்கு ரூ.5,866 லிருந்து துவங்குகிறது.

இடம். 70 ஜெல்லிகோ ரோடு, சிங்கப்பூர், 208767

Book Your Stay at V Hotel LavenderBook Your Stay at V Hotel Lavender

பான் பசிஃபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டல்​

         ஆர்ச்சர்ட் ரோட்டில் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது தி பான் பசிஃபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டல். இது ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 5 நிமிட தொலைவில் உள்ளது. அயன் ஆர்ச்சர்ட், வீல்லாக் ப்ளேஸ், பலாய்ஸ் ரினைசன்ஸ், சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா ஆகிய முக்கிய கடைத்தெரு மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்குப் போவது மிகவும் எளிது. உங்கள்  குழந்தைகளை பிசியாக வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் இந்த ஹோட்டலில் உள்ளன. சிறிய குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தை பராமரிப்பு சேவைகளும் வழங்கப்படுகின்றன. 

         படம் வரையும் புத்தகங்கள், க்ரேயான்கள் (வண்ணம் தீட்டும் மெழுகு பென்சில்கள்), குழந்தைகளுக்குத் தேவையானவற்றை கடனாக வழங்கக்கூடிய அளவில் சில வசதிகள், குழந்தைகள் அறைக்கு உள்ளேயே உண்பது போன்ற சில உணவுப்பட்டியல்கள், ஆகியவை சன்மானமாக குழந்தைகளின் சந்தோஷத்திற்காக கிடைக்கின்றன. நீங்கள் விடுமுறையை மிகவும் குதூகலமாக கழிக்க இவை உதவும்.

விலை. ஓர் இரவிற்கு ரூ.17,039லிருந்து துவங்குகிறது.

இடம். 10 க்ளேமோர் ரோடு, சிங்கப்பூர்  229540

Book Your Stay at Pan Pacific Orchard HotelBook Your Stay at Pan Pacific Orchard Hotel

ராமாடா ஹோட்டல் 

ramada-hotel

சிங்கப்பூரின் நொவேனா\ பாலஸ்டியர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமாடா ஹோட்டல். இது நொவேனா எம்ஆர்டி நிலையத்திலிருந்து 5 நிமிட தொலைவில் உள்ளது.  பணிச் சூழலியல் பாணியின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஹோட்டல். நொவேனா எம்ஆர்டி நிலையம் மற்றும் ஆர்ச்சர்ட் ரோடிலிருந்து உங்களை இந்த இடத்திற்கும் இங்கிருந்து அந்த இடங்களுக்கும் அலைத்துச் செல்ல மகிழுந்து வசதி (ஷட்டில் சேவை) உள்ளது. எனவே குழந்தைகளுடன் அந்த நாளைக் கழிப்பது மிகவும் எளிது.

தி ஜோங்ஷான் மால் இந்த ஹோட்டலில் இருந்து ஒரே தாவலில் செல்லும் தூரத்தில் உள்ளது. உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் வெளியே சென்று மகிழ்ச்சிகரமாக பொழுதைக் கழிக்க முடியும். ரமாடா ஹோட்டலில் இருந்து 10 நிமிட தூரத்தில் உள்ள சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவிற்குச் செல்லுங்கள். நீங்கள் அறையிலேயே தங்கிக்கொண்டு அங்குள்ள பெரிய சன்னல்களின் மூலம்  நகரின் அழகைக் கண்டு களிக்க வேண்டுமா, இங்குள்ள 384 அறைகளிலும் அது சாத்தியம். இது மிகவும் உத்வேகமான அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு வெளிப்புற குளம், ஜோங்ஷான் பூங்காவில் உள்ள ஆசிய பாணி உணவகத்திற்கு எளிதாக செல்லுதல், உயர் வேக வைஃபை ஆகியவை இந்த தங்குமிடத்தில் அதிக கேளிக்கை கிடைக்க உதவுகின்றன.

விலை. ஓர் இரவிற்கு ரூ.7,694லிருந்து துவங்குகிறது.

இடம். 16 ஏஎச் ஹூட் ரோடு, சிங்கப்பூர்  329982

Book Your Stay at Ramada HotelBook Your Stay at Ramada Hotel

ஹோட்டல் பாஸ் 

hotel-boss

விக்டோரியா தெருவில் அமைந்துள்ள இந்த நவீன ஹோட்டல் லாவண்டர் எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெறும் 450 மீட்டர்கள் தொலைவில் உள்ளது. சிட்டி ஸ்கொயர் மால் மற்றும் சர்ச் ஆஃப் அவர் லேடி ஆஃப் லோர்டிஸ் ஆகியவை இதற்கு மிக அருகில் உள்ளன. எனவே குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெகு தூரம் செல்லாமல் மிகக் குறைந்த தொலைவிலேயே உல்லாசத்தை அனுபவிக்கலாம்.

நவீன கால வசதிகளுக்காக அழகாக வடிவமைக்கப்பட்ட 1500 அறைகள் இங்கு உள்ளன. சூரிய ஒளியில் சில கேளிக்கைகள் நிகழ்த்த ஒரு வெளிப்புற நீச்சல் குளம் உள்ளது. குழந்தைகளை பிசியாக வைத்துக்கொள்வதற்கு அற்பணிப்புள்ள விளையாட்டு இடம் ஒன்று உள்ளது என்றும் இந்த ஹோட்டல் பெருமைப்பட்டுக் கொள்கிறது.

விலை. ஓர் இரவிற்கு ரூ.4,756லிருந்து துவங்குகிறது.

இடம். 500 ஜலான் சுல்தான், சிங்கப்பூர்  199020

Book Your Stay at Hotel BossBook Your Stay at Hotel Boss

டேய்ஸ் ஹோட்டல் 

Days-Hotel

    ஜோங்ஷான் பூங்காவின் அழகிய காட்சிகளையும் அற்புதமான சேவையையும் இந்த ஹோட்டல் வழங்குகிறது. அழகிய சிறிய அறைகளும் அருகில் அமைந்துள்ள தனித்துவமான சந்தைகளும் இந்த ஹோட்டலின் சாதகமான அம்சங்கள். பலாஸ்டியர் சாலை மற்றும் சசாநாரம்சி புத்தர் கோவில் ஆகியவை இங்கிருந்து சில நிமிட தொலைவில் உள்ளன.

         ஸ்கொயர் 2 ஷாப்பிங் மாலில் இருந்து இது சிறு தொலைவில் உள்ளது. வாகனத்தில் சென்றால் வெகு விரைவில் சென்று விடலாம். வசதியான தங்குமிடத்தையும் சில சுவையான சுற்றுலாக்களையும் இந்த ஹோட்டல் அளிக்கிறது. இந்த நகரை சிரமம் இல்லாமல் சுற்றிப்பார்க்க, இந்த ஹோட்டலில் சன்மானமான சேவை வழங்கப்படுகிறது. இங்கிருந்து நொவேனா எம்ஆர்டி நிலையம் மற்றும் இரைச்சல் மிகுந்த ஆர்ச்சர்ட் ரோடு ஆகியவற்றிற்கு செல்வது எளிது.

விலை. ஓர் இரவிற்கு ரூ.5,138லிருந்து துவங்குகிறது.

இடம். 1 ஜலன் ராஜா, சிங்கப்பூர்  329133

Book Your Stay at Days HotelBook Your Stay at Days Hotel