ஹோட்டல் புக்கிங்குகள் மூலம் அதிக பலன்களைப் பெறுவதற்கான 5 குறிப்புகள்

Mikhil Rialch

Last updated: Jun 16, 2017

 நாம் தெளிவாக இருப்போம். வருந்தத்தக்க முறையில் மோசமான ஹோட்டலை புக் செய்து விட்டு உங்களது விடுமுறை பாழாகிறதே என்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் அளிக்காமல் இருக்கவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையின் சுருக்கத்தை இரண்டே வார்த்தைகளில் இரத்தினச்சுருக்கமாக சொல்வதென்றால், நீங்கள் எப்படி உயிர்ப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்ததே இந்தக் கட்டுரை. ஒரு ஹோட்டலைப் புக் செய்யும்போது, நீங்கள் செய்வது மட்டுமல்ல, நீங்கள் செய்யாமல் விட்டதும் உங்களது வருத்தத்திற்கான பட்டியலில் இடம்பெறுகின்றன என்று அனுபவம் கூறுகிறது.

ஒரு நீண்ட கால பயணமோ அல்லது தளர்ந்த கார் பயணமோ போல் அல்லாமல், உங்களது விடுமுறையின் மொத்தத் தங்கும் நேரத்துடனும் உண்மையாகவே தொடர்புடையது ஹோட்டலில் நீங்கள் தங்குவது. மோசமான ஹோட்டல் அனுபவத்தால் நிறைய சந்தோஷமான விடுமுறைகள் சோகத்தில் முடிந்து பாழாகியுள்ளன. அது உங்களது அடுத்த விடுமுறையில் நடக்காமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். எனவே ஹோட்டல் புக்கிங்குகள் மூலம் அதிகப் பலன் பெறுவதற்கான 5 நுணுக்கங்களை நாம் பகிர்ந்துகொள்வோம்.

 

இடம், இடம், இடம் 

hotel-booking-tips

அமைந்துள்ள இடம் என்று வரும்போது நாம் முடிவெடுக்க வேண்டியது அவசியம். உங்களது விடுமுறையின்போது நீங்கள் உங்கள் பயணத்தைப் பற்றித் தெளிவாக இருந்தால், உங்களது அடிப்படை என்ன என்பதைக் கண்டறிவது சுலபம். வரைபடத்தில் சற்று நேரம் செலவிடுங்கள். அது மிகவும் பயனுள்ளது.  வழிதடத்திற்கான  திட்டம் மிகவும் நகைச்சுவையாகக் கூட முடியலாம்.

ஆனால் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் தளங்களுக்கு அருகில் ஒரு அற்புதமான ஹோட்டலை நீங்கள் புக் செய்து இருந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு முற்றிலும் புதிதான ஒரு இடத்திற்கோ அல்லது நாட்டிற்கோ  நீங்கள் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு ஆங்கிலம் அதிகமாகப் பேசப்படவில்லை. நீங்கள் தங்கவிருக்கும் ஹோட்டல் எங்கிருக்கிறது என்று உங்களது டாக்சி ஓட்டுனருக்கு தெரியலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம்.  அதற்கான சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் ஹோட்டல் குறித்த வரைபடத்தை கையிலேயே வைத்துக்கொள்ளவும். குறிப்பாக, அந்த ஹோட்டல் அளிக்கும் பயணச் சேவை இல்லாத பட்சத்தில் இது மிகவும் முக்கியம்.

 

பாதுகாப்புதான் முதல்

வரவேற்பு மேசையில் பணம் செலுத்தும் நாட்கள் சென்றுவிட்டன. பல்வேறு புக்கிங் வலைதளங்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும். தற்காலத்தில் ஹோட்டலில் தங்கவேண்டுமென்றால் அதற்கான நாணயம் பண அட்டைதான் (கிரெடிட் கார்டு).  அது மிகவும் வசதி. தொந்தரவு இல்லாதது. இருப்பினும் இதனை இயந்திரத்தில் உராய்ந்து பயன்படுத்த நம் மக்கள் தயங்குவதற்கும் ஒரு காரணம் உள்ளது.

இணையதளத்தில் உள்ள பல்வேறு வலைதளங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யார் நம்பகமானவர், யார் உங்களை ஏமாற்றப் போகிறவர் என்று சொல்வதற்கு யாருமில்லை.  உங்களுக்கு நம்பகமான முறையில் ஏதேனும் சலுகை கிடைத்தால் அதை நம்பக்கூடாது. பாதுகாப்பான  பணப் பரிமாற்றத்திற்கு உங்களது இணையதளத்தை சோதித்து உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும்.  பல்வேறு பிரதான வங்கிகளும் பண முகமைகளும்  மறைக்குறியீடு கொண்ட மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் பரிமாற்றங்கள் உத்தரவாதப்படுத்தப்படுகிறது.  உங்களுக்கு சந்தேகம் எழும்போது, அந்த குறிப்பிட்ட ஹோட்டலுக்கு  அழைத்து, நீங்கள் புக் செய்ய உதவும் முகவர், சட்டபூர்வமானவர்தானா என்று உறுதி செய்துகொள்ளவும்.  உங்களது வங்கி விவரங்களைப் பாதுகாப்பதற்காக நீங்கள் அதிக தூரம் செல்லவேண்டிய சிரமம் இல்லை.

 

நேரம்தான் எல்லாம் 

hotel-booking-tips

பண்டிகைக் காலங்களிலும் பிராந்திய நிகழ்ச்சிகளின் போதும் அறைகளைப் புக் செய்வதற்கு  கூட்டம் அதிகம் சேரும். இதனால் ஹோட்டல்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தக்கூடும்.  இதற்கு தலைகீழான காரணி என்னவென்றால் நீங்கள் எப்போது புக் செய்வது என்பது குறித்துத் தெளிவாக இருந்தால், உங்களது ஹோட்டல் அறையை முன்னரே புக் செய்து, நீங்கள் பெரிய அளவில் பேரம் செய்து, இலாபம் பார்க்கலாம். 

இந்த பேரத்தை கணிசமான அளவு மேலும் இனிமையாக்க பல்வேறு பரிசு திட்டங்களும் உண்டு.  எனவே பண்டிகைக்கால சலுகைகள் ஏதும் கிடைக்கின்றனவா என்று எப்போதும் தேடவும். உங்களது முடிவெடுக்கும் திறன் குறித்து தெளிவாக இருக்கவும். ஏனெனில் இத்தகு சலுகைகள் விரைவில் பயன்படுத்தப்படும்.  பல்வேறு ஹோட்டல்கள் காலை உணவை சன்மானமாக வழங்குகின்றன.  முன்னரே உள்ள கட்டணத்தின்படி இலவச வைஃபை வசதியையும் வழங்குகின்றன. இவையெல்லாம் நீங்கள் அவர்களிடம் புக் செய்யவேண்டும் என்று உங்களைக் கவர்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆகும்.  அவர்களது ஆர்வத்தை உங்களது பலனாகக் கருத்தில் கொண்டு உங்களுக்காக மகத்தான பேரத்தைப் பேசி முடிக்கவும்.

 

எப்போதுமே தெளிவான நிபந்தனைகளைப் படிக்கவும். 

hotel-booking-tips

நீங்கள் புக் செய்துள்ள குறிப்பிட்ட ஹோட்டல் ஏதாவது விசுவாச போனஸ் அளிக்கிறதா? நீங்கள் ஏதாவது மூன்றாவது நபர் இணையதளத்தை மூலம் புக் செய்யும்போது அதே சலுகைக் கிடைக்கிறதா? நீங்கள் செலுத்தியுள்ள அறைக்கட்டணம் சன்மான காலை உணவையும்,  இலவசமாக அழைத்துச்செல்லும் வசதியையும் அளிக்கின்றனவா?  அந்த ஹோட்டலின் ரத்துசெய்யும் விதிகள் யாவை?

விதிகள் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளில் சில எழுத்துக்களுக்கு, சில ஹோட்டல்கள், சிறிய உரு எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன. இதற்குக் காரணம் உள்ளது. நீங்கள் எங்கு செல்லப்போகிறீர்களோ அது குறித்த தகவல் உங்களுக்கு இல்லையென்றால் அது குறித்து யாரும் உங்களுக்கு உதவப்போவதில்லை என்பதுதான் உண்மை. ஹோட்டல் பேரங்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் பெரிய வழி எதுவென்றால் வாடிக்கையாளர்கள் சேவையைப் புரிந்துகொள்வதுதான். அவர்களுள் பலர்  அவர்கள் பெற்ற இலவசப் பொருட்கள் குறித்துத்தான் அதிகம் பேசுவார்கள், அல்லது அந்த ஹோட்டல் அளித்த மோசமான அனுபவம் குறித்து பேசுவார்கள். இதனால் அந்த ஹோட்டல் குறித்த ஓரளவு கருத்து உங்களுக்கு ஏற்படும். 

அடிப்படையில் உங்களது சொந்த ஆராய்ச்சியை நீங்களே மேற்கொள்ளவும்.

 

கேட்பதற்குத் தயங்காதீர்கள்

நிறைய  கேள்விக் கேட்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை பலர் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.  நீங்கள் ஒரு நல்ல ஹோட்டலைப் புக் செய்யவேண்டும் என்று வரும்போது,  அல்லது கேட்கும்போது (மற்ற வார்ததைகளில் சொல்வது என்றால், வேண்டும்போது), சிறந்த ஒன்றைத் தேர்வு செய்வதற்கு வெகுநேரமாகும். பல்வேறு ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. உங்களது அடுத்த பயணத்தின்போதும் நீங்கள் அவர்களிடம் வருவீர்கள்  என்று அவர்கள் எந்த அளவிற்கு உறுதியாக நம்புவார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  வரவேற்பறையில் உள்ள மேலாளரிடம் சற்று அமைதியாக பேசினாலே நமது தந்திரம் பலிக்கும். உணவகத்தில் உள்ள தள்ளுபடி சலுகைகள், இலவச ஸ்பா வசதி ஆகியவை குறித்து அறிந்துகொள்ளலாம்.  நீங்கள் கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது. எனவே அங்குள்ள பணியாளர்களிடம் நட்புடன் பழக ஆரம்பியுங்கள்.

 

இந்த நுணுக்கங்களைக் கருத்தில்கொண்டு, ஹோட்டல் பேரத்தை வெற்றிகரமாகக் கையாண்டு நீங்கள் அடையவிருக்கும் இடத்தை அடைவீர்கள் என்று நம்புவோம்.  ஒரு பெரிய ஹோட்டலை எவ்வாறு புக் செய்து என்பது குறித்து உங்களுக்கு வேறேதும் ஆலோசனை இருந்தால் எங்களிடம் தெரிவிக்கவும்.