உங்கள் பணத்திற்கு அதிக மதிப்பளிக்கும் உதய்பூரின் 5 பட்ஜெட் ஹோட்டல்கள்

Mikhil Rialch

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

அன்றைய இராஜ்புத்தான சமஸ்தானங்களில் மிகவும் சொகுசானதும் அழகிய காட்சிகளையும் கொண்ட நகரம் உதய்பூர். புராதன ஏரிகள், ஐஸ்வர்யமான செல்வம் கொழிக்கும் அரண்மனைகள், அரமாக நிற்கும் கோட்டைகள் என உதய்பூரின் நிலவளம்  மிகவும் செல்வம் மிக்கது. இராஜஸ்தானின் இராஜபுத்திர பாரம்பரியத்தின் துடிப்புமிகு கலாச்சார திருவிழாவிற்கு உதய்பூர் உங்களை அழைத்துச் செல்லும்.

உதய்பூர் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது என்பதே மிகவும் செலவுமிக்க கருத்து. எனவே உங்களது பணப்பையை ஓர் அங்குலம் கூட பதம் பார்க்காமல் அதே சமயம் சொகுசாக உதய்பூரில் தங்குவதற்குத் தேவைப்படும் 5 பட்ஜெட் ஹோட்டல்களின் பட்டியலை  நாங்கள் சேகரித்துள்ளோம். பயணிகளின் அழகியல் ரசனைகள், அவர்களது குடும்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல், அந்த நகரத்தின் முக்கிய கவர்ச்சிகரமான இடங்களுக்கு அருகில் செல்லுதல் என்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் நாம் உள்ளே செல்லலாம்.

கோல்டன் துலிப், உதய்பூர்

golden-tulip-udaipur

கண்டிப்பாக சொல்வதென்றால் இது பட்ஜெட் ஹோட்டல் அல்ல. ஆனால் அங்குள்ள குடும்பத்திற்கு நட்பு ரீதியாக உள்ள சூழல், உதய்பூரில் நல்ல நாகரிகமான ஹோட்டலைக் கண்டறிவதற்கு ஆகும் செலவு ஆகியவற்றை ஒப்பிடும்போது ஓரளவு நமது பட்ஜெட்டிற்குள் இந்த ஹோட்டல் வரும். பிச்சோலா ஏரியிலிருந்தும் நகர அரண்மனையிலிருந்தும் ஒரு சில நிமிடங்களின் தொலைவில் உள்ள கோல்டன் துலிப் உதய்பூரானது,  முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் கலாச்சார முக்கிய இடங்களுடனும் நல்ல தொடர்பு கொண்டுள்ளதை ஆரவாரமிட்டுக் கூறுகிறது.

 நன்கு சொகுசாக தங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில சொகுசான அறை வசதிகள், ஹோட்டல் வசதிகள் ஆகியவற்றை ஹோட்டல் கோல்டன் துலிப் அளிக்கிறது. ஒரு வணிக மையம், நீச்சல் குளம், பலதரப்பு உணவு கொண்ட உணவகம், உடற்பயிற்சி மையம், ஸ்பா, நாணயப் பரிமாற்றம், வேலைக்காரர்கள், காபி அருந்தகம், மதுபானம் அருந்தகம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஹோட்டல் கோல்டன் துலிப் உதய்பூரானது, விலைக்கும் வசதிக்கும் இடையே சமநிலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதய்பூரில் உள்ள ஹோட்டல்களிலேயே சிறந்த தேர்வு.

ஒவ்வொரு இரவுக்கான விலை: ஓர் இரவிற்கு ரூ.3400 லிருந்து துவங்குகிறது.

இடம்: 63வது அவென்யூ, சர்தார்புரா, சுகாடியா வட்டத்திற்கு அருகில், உதய்பூர், இராஜஸ்தான் 313 001.

Book Your Stay at Golden TulipBook Your Stay at Golden Tulip

ஸ்ரீ நாராயணா உதய்பூர் 

shree narayana udaipur

பதே சாகர் ஏரி, நகர அரண்மனை, பிச்சோலா ஏரி, ஜகதீஷ் கோவில் ஆகிய நகரின் முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு அருகில் ஸ்ரீ நாராயணா உதய்பூர் ஹோட்டல் உள்ளது. உதய்பூரில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் விட ஸ்ரீ நாராயணா உதய்பூர் ஹோட்டல் சிக்கனமான சிறந்த தேர்வு என்று செல்லாலாம்., குடும்பத்திற்கும் வணிக யாத்திரீகர்களுக்கும்  தேவையான நவீன வசதிகள், வணிக மையம் உள்ளிட்ட சேவைகள், சந்திப்பறை, பலதரப்பு உணவு கொண்ட உணவகம், சாவகாசமாக தங்குவதற்குத் தேவைப்படும் பல்வேறுவிதமான ஹோட்டல் சேவைகள் ஆகியவை உள்ளன. ஜோடியாக வரும் பயணிகள் இதனை மிகவும் சிக்கனமாக உணர்வார்கள். பல்வேறு ஹோட்டல் அமைப்புகளின் உயர்தர தரச்சான்றுகளைப் பெற்றதால், உதய்பூரில் உள்ள ஹோட்டல்களில்  ஸ்ரீ நாராயணா உதய்பூர் ஹோட்டல் மிகவும் நம்பத்தகுந்த தேர்வு.

ஒவ்வொரு இரவுக்கான விலை: ஓர் இரவிற்கு ரூ.2700

இடம்: எண்.2-பி, ஹோட்டர் தெரு, ஐசிஐசிஐ வங்கி எதிரில், உதியாபோல், உதய்பூர், இராஜஸ்தான் 313 001. 

Book Your Stay at Shree NarayanaBook Your Stay at Shree Narayana

​ட்ரீபோ பார்க் கிளாசிக் 

ardency-inn-udaipur

உத்யபூரில் உள்ள ஹோட்டல்களின் பட்டியலில் மிகவும் சிக்கனமான ஹோட்டல் ட்ரீபோ பார்கள் கிளாசிக். நிறைவான தங்கும் வசதியை உறுதிப்படுத்த உதய்பூரின் முக்கிய சுற்றுலாத்தளங்களுக்கு மிக அருகில் உள்ளது இந்த ஹோட்டல். தங்குவதற்கு சுத்தமான, இடவசதி நிறைந்த அறைகளுடன் இலவச சேவைகளாக வை   ஃபை வசதி, பார்கிங் வசதி, தினமும் சுத்தப்படுத்தும் வசதிகளான ஹௌஸ்கீப்பிங் போன்ற வசதிகள், பல சிறந்த இடவசதிகள் ஆகியவை உங்கள் பணத்திற்கு ஏற்ற மதிப்பைத் தருகின்றன. ஹோட்டல் விலைகளில் அதிகம் செலவிடாமல் உதய்பூரில் நன்கு சுற்றிக்களிக்க, உதய்பூரின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ட்ரீபோ பார்க் கிளாசிக் மிகவும் அவசியம்.

ஒவ்வொரு இரவுக்கான விலை: ஓர் இரவிற்கு ரூ.1890

இடம்: 12, துர்கா நர்சரி சாலை, சக்திநகர், உதய்பூர், இராஜஸ்தான் 313 001.

Book Your Stay at Ardency InnBook Your Stay at Ardency Inn

ஆகையால், உங்கள் பட்ஜெட்டுடன் பிராமாண்டமும் இணைந்து ஒரு சமநிலை உருவாக வேண்டுமா அல்லது, நீங்கள் வெளியே செல்லும்போது  உங்களது பைகளை வைத்துவிட்டு செல்வதற்கான இடம் தேவையா? நீங்களே தேர்ந்தெடுங்கள். உங்களது உதய்பூர் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நாங்களும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.