குளிரிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதற்கு இந்தியாவில் உள்ள 9 இதமான கோடை ஸ்தலங்கள்

Maryann Taylor

Last updated: Sep 24, 2019

Want To Go ? 
   

குளிர்காலம் நமது கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னைப் போலவே இருந்தால், குளிரும் மாதங்களை இங்குக் கழிக்க உங்களுக்கு அவ்வளவு பெரிதாக ஒன்றும் ஆர்வம் இருக்காது. குளிரிலிருந்து தப்பிக்க வேண்டுமா, இந்தியாவில் உள்ள இந்த 9 அற்புதமான கோடை ஸ்தலங்களுக்கு தப்பித்துச் செல்லுங்கள். கதிரவனின் வெப்பத்தின் கீழ் அதிகமான கேளிக்கையை அனுபவியுங்கள்.

இராஜஸ்தான்

winter-destinations-in-india-rajasthan

பாலைவனத்தின் அழகிய அனுபவத்தைப் பெறுவதற்கான அற்புதமான வழி இராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்தாகும். கண்கள் எட்டும் வரை  பல மைல்களுக்கான மணல் மேடுகள் சூழப்பட்டுள்ள தார் பாலைவனத்திற்குப் பயணம் செய்வது உண்மையிலேயே ஓர் அற்புதமான அனுபவம்.  இங்குள்ள சூரிய அஸ்தமன காட்சிகள் மனதை ஸ்தம்பிக்க வைக்கும். இரவை அங்குள்ள பாலைவன முகாமில் இராஜஸ்தானிய உணவு உண்டு, நாட்டுப்புற நடனங்களையும் இசை நிகழ்ச்சிகளையும் கண்டு களியுங்கள். மங்கனியார் பழங்குடியினர்களின் இசையின் எதிரொலியில், நட்சத்திரம்  நிறைந்த இரவில் ஆழ்ந்து உறங்குங்கள். உங்களது உடலும் உள்ளமும்  இணைந்த இதமான அனுவம் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

Book Your Flight to Jaipur

கோவா

winter-destinations-in-india-goa

 

குளிர்காலத்திலிருந்து தப்பிச்சென்று ஓய்வெடுக்க சிறந்த இடம் கடலும், அலையும், துள்ளி விளையாடும் சூரியனின் நிலமான கோவா. இங்குள்ள கடற்கரைகளுடன், கோவாவில் பல்வேறு புகழ்பெற்ற ஸ்தலங்கள் உள்ளன. போர்ச்சுக்கீசிய பரோக் நவநாகரிகக் கட்டிடக்கலையின் கீழ் கட்டப்பட்டுள்ள காலனியாதிக்க காலத்தின் தேவாலயங்கள், சுவையான கடல் உணவு மற்றும் துடிப்பான இரவு வாழ்க்கை ஆகியவை கோவாவில் உள்ளன. கடற்கரையில் ஓய்வெடுங்கள். நீங்கள் ஒரு சாகச ஆர்வலராக இருந்தால், ஜெட் ஸ்கீயிங், விரைவான படகு சவாரி, வாழைப்பழ படகு சவாரிகள் மற்றும் படகுடன் இணைக்கப்பட்ட பாராசூட் பயணம் உள்ளிட்ட நீர்  விளையாட்டுக்களை அனுபவியுங்கள்.

பழைய கோவாவில் பண்டைய போர்ச்சுக்கீசிய தேவாலயங்களில் ஒரு நாளைக் கழியுங்கள். இவற்றுள் மிகவும் பிரபலமானது பாம் இயேசுவின் நெடுமாட தேவாலயமாகும். இங்கு புனித பிரான்சிஸ் சேவியரின் இறுதிக்கால அஸ்திகள் உள்ளன. புனித அந்தோனியார், கர்லிகள், மாம்போக்கள், டிட்டோக்கள், என பல்வேறு பிரபலமான இரவு விடுதிகளில், உங்கள் இரவைக் கழியுங்கள். இவையெல்லாம் கரோக்கே இரவுகளுக்குப்  பிரபலம்.

Book Your Flight to Goa

புதுச்சேரி(பாண்டிச்சேரி)

winter-destinations-in-india-pondicherry

இது முன்னாள் பிரஞ்சு காலனி. காலனியாதிக்க கட்டிடங்கள், கடற்கரைகள் மற்றும் தரமான பிரஞ்சு உணவுக்கு பெயர்போனது இந்த அமைதியான சிறு நகரம். பாண்டிச்சேரியை நீங்கள் வித்தியாசமாக அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா, நீங்கள் சில தினங்களை ஆரோவில்லில் கழிக்கலாம் என்பது எங்களது ஆலோசனை. ஆரோவில் அமைதியான, நிசப்தமான சமூக வாழ்கையை அளிக்கும். மண்பானை செய்வதன் நுட்பத்தை அறிந்துகொள்ளவும் நீங்கள் சற்று நேரம் செலவிடலாம். கேக் செய்வது உள்ளிட்ட பேக்கரி உணவுகள் செய்வது குறித்தும் அறிந்துகொள்ளலாம்.  ஆரோவில்லுகென்று தனி பேக்கரி உள்ளது. அங்கு நீங்கள் பாரம்பரிய பிரஞ்சு காலை உணவையும் பிரியோச்சி (சுருட்டி மடிக்கப்பட்ட பேக்கரி உணவு வகை), குக்கீஸ், எலுமிச்சை கேக், பழ இனிப்புகள், கிரீம் பஃப்ஸ்சுகளையும் உண்ணலாம்.  நிறைவாக தோன்றுகிறது அல்லவா.

Book Your Flight to Pondicherry

ரண்தம்போர்

உங்களுக்கு காட்டு வாழ்கையின் சுவாரஸ்யம் பிடித்திருந்தால், பின்னர் ரண்தம்போரில் சஃபாரி (வேட்டைப் பயணம்) செய்வது கட்டாயம் தேவை. 1,334 சதுர கிலோ மீட்டர்கள் தூரம் பரந்து விரிந்த இந்தக் காட்டுப்பகுதி இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இராயல் பெங்கால் புலியின் உறைவிடம். அது மட்டுமல்லாமல் சதுப்பு நில முதலைகள், சிறுத்தைகள், சிறுத்தைப்புலிகள், மரங்கொத்தி பறவைகள் மற்றும் மீன்கொத்திப் பறவைகள் உள்ளிட்ட 300 வகையான பறவைகள் ஆகியவை இங்கு வசிக்கின்றன. நீங்கள் புலியைக் காண இரண்டு மூன்று முறை சஃபாரி பயணம் செல்லலாம் என்பது எங்களது ஆலோசனை. காட்டுவாழ்கையை விட ரண்தம்போரில் வேறு பல சுற்றுலா சிறப்புகளும் உள்ளன. ரண்தம்போரின் கோட்டை 10ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது.  பல்வேறு புராதன மசூதிகள், கோவில்கள், மற்றும் சத்திரிகள் (புதைக்கப்பட்ட சமாதிகள்) ஆகியவையும் இங்கு உள்ளன.

Book Your Flight to Jaipur

ஆலப்புழா

winter-destinations-in-india-alleppey

தெளிவான உப்பங்கழிகள், காயல்கள், அசையும் பசுமை நிறைந்த தென்னை, பனை மரங்கள், காணுமிடமெல்லாம் பசுமையான மரங்களின் அணிவகுப்புகள் – இதுதான் உங்களுக்கான ஆலப்புழா. ஆலப்புழாவின் அமைதியான நீர்நிலைகளை நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால் ஒரு கெட்டுவெள்ளத்தில் (வீட்டுப்படகு) பயணம் செய்ய வேண்டும்.  அவற்றுள் பல கெட்டுவெள்ளங்கள் முழுவதும் ஃபர்னிஷ் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு படுக்கையறை, சூரியத்தளம், குளியலறை, அடுப்படி மற்றும் குளிர்சாதன வசதி ஆகியவை உள்ளன. இங்குள்ள பணியாளர்களுள் ஒரு கேப்டன், ஒரு பாதுகாவலாளி மற்றும் சமையற்காரர் ஆகியோர் அடங்குவர். பாரம்பரிய கேரள உணவான அப்பம் மற்றும் ஸ்டூ, மீன் குழம்பு, மற்றும் மலபார் பரோட்டக்கள் ஆகியவற்றை உங்களது கெட்டுவெள்ளத்தில் சுவைக்க மறக்காதீர்கள்.  இந்த உப்பங்கழியில் ஒரு நாள் நன்கு ஓய்வெடுத்து உங்களை ஆசுவாசப்படுத்திகொண்டு, நன்கு படித்து அனுபவியுங்கள். அடிக்கடி பயணம் செய்து களைத்துப்போன உங்கள் ஆன்மா புதிய மூச்சை இழுத்து புத்துணர்ச்சி பெறட்டும். இங்கிருந்து தொலைவில் காணப்படும் நெற்வயல்களின் பசுமைக் காட்சிகளையும் சிறிய கிராமங்களையும் கண்கொள்ளாமல் கண்டு மகிழுங்கள்.

Book Your Flight to Allepey

மகாபலிபுரம் 

winter-destinations-in-india-mahabalipuram

இந்த சில்லென்ற பனிக்காற்றிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது மகாபலிபுரத்தின் இதமான கடற் கோவில்கள். இந்த கோவில் நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னம். இது தனது வரலாற்று கோவில்களுக்குப் புகழ்பெற்றது. இங்குள்ள கவர்ச்சிகரமான ஸ்தலங்களுள் மிகவும் பிரபலமானது அர்ஜுனன் தவம் செய்யும் சிலை. அருகருகே அமையப்பட்ட இரண்டு பாறைகளை இணைத்து பிரம்மாண்டமாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் புராணங்களிலிருந்து இந்த மாபெரும் நினைவுஸ்தலத்தின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒற்றைக்காலில் அர்ஜுனன் தவம் செய்வது போன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள மற்ற முக்கியமான அம்சங்கள், ஐந்து ரதங்கள் (7ஆம் நூற்றாண்டு காலத்திய இந்து கோவில்), கடற்கரை கோவில், கடலை நோக்கிக்கொண்டிருக்கும் 8ஆம் நூற்றாண்டு பாறை வடிவம்  ஆகியவை.

உங்களுக்கு ஆர்வமாக இருந்தால், உள்ளூர் கலைஞர்களின் வழிகாட்டுதலுடன் நீங்களும் கல்வெட்டி சிற்பம் செதுக்க முயற்சிக்கலாம்.  நீங்கள் இங்கு இருக்கும்போது கிரானைட் சிற்பங்களையும் சோப்புக்கற்களையும் வாங்கிச் செல்ல மறக்காதீர்கள். நீங்கள் விரும்பினால் நீங்கள் வாங்கும் பொருட்களை உலகில் எங்கு வேண்டுமானாலும் அனுப்புவதற்கான பார்சல் வசதியும் இங்குண்டு. மூட்டைத் தூக்கவேண்டிய சிரமம் உங்களுக்கு இல்லை.

Book Your Flight to Chennai

கோனார்க்

winter-destinations-in-india-konark-sun-temple

இந்தியாவின் உன்னதமான வடிவமைப்புகளுள் ஒன்று கோனார்க் சூரிய கோவில் ஆகும். இந்த நகரத்தின் முக்கியமான கவர்ந்திழுத்தல் கோனார்க் சூரிய கோவிலாகும். 13ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும் இந்த சூரிய கோவிலானது, வெப்பத்தின் கடவுளான சூரியனின் தேராக உணரப்படுகிறது. இந்த பிரமாண்டமான  கல்வடிவத்தை ஏழு சக்திமிக்க குதிரைகள் இழுத்துச்செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 24 கல் கொண்ட  வண்டிச்சக்கரங்கள் உள்ளன. இவை ஒரு நாளின் 24 மணிநேரத்தைக் குறிக்கின்றன.

சூரியனின் முதல் கிரணங்கள் கோவில் உள்புறத்தை சென்றடையுமாறும் அதன் உள்புற கடவுளைக் காணுமாறும்  இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமானது உண்மையிலேயே தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. இந்த கோவிலின் ஒட்டுமொத்தக் கட்டிடக்கலையையும் கண்டு களிக்க நீங்கள் ஒரு முழு நாளை ஒதுக்கவேண்டியிருக்கும்.

 நீங்கள் விரும்பினால், இங்குள்ள தொல்பொருள் அருங்காட்சியத்திற்கும் செல்லலாம். இந்தச் சூரிய கோவிலை அகழ்வாராயும்போது கண்டறியப்பட்ட சிலைகளும் சிற்பங்களும் இங்கு உள்ளன. இந்தக் கோவிலைச் சுற்றி நடக்கும்போது உங்கள் உடலில் உள்ள குளிர்ந்த உணர்வு கண்டிப்பாக எடுக்கப்படும்.

Book Your Flight to Konark

ரன் ஆஃப் கச்

winter-destinations-in-india-rann-of-kutch

உலகின் மாபெரும் உப்புப் பாலைவனங்களுள் ஒன்று ரன் ஆஃப் கச். இது ஓர் அற்புதமான இயற்கை அமைப்பு. வறண்ட காலங்களில் இந்த உப்பளங்கள் ஒரு தீவு ஆகும். ஆனால் மழைக்காலத்தில் இங்கு வெள்ளம் வந்து இது உப்பு ஏரியாக மாறுகிறது. இங்குள்ள மாபெரும் கவர்ச்சி ரன் உத்சவ். அப்போது உண்மையான குஜராத் வெளிப்படும். பாரம்பரிய குஜராத்திய  நாட்டுப்புற இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் சொகுசான முகாம்கள் ஆகியவை இங்கு உள்ளன. கருத்தியல் ரீதியாக புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த உப்பு வனம் பல்வேறு சந்தர்ப்பங்களை வழங்குகிறது.

Book Your Flight to Rann of Kutch

மாத்தேரன்

நிறைவான இதமான வார இறுதி சுற்றலாவிற்கு அற்புதமான இடம் மாத்தேரன்.. இது மும்மையிலிருந்து 2 மணிநேர பயண தூரத்தில் உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் வாகனங்கள் இல்லாத ஒரே பிரதேசம் என்று உங்களுக்குத் தெரியுமா? இங்குள்ள காற்று சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் உள்ளது. உயர்வான இடத்தில் சயாத்திரி மலைகளில் உள்ள மாத்தேரன், மரகதப் பச்சை மரங்களின் இல்லம் ஆகும்.

நெடுந்தூர நடைபயணங்களும் மூச்சுபிடிக்கும் காட்சிகளும் இங்கு நிறைவை அளிக்கின்றன. இது மலை வாசஸ்தலமாக இருந்தாலும், இங்குள்ள பருவநிலை குளிர்கால மாதங்களில் இதமாகவே உள்ளது. தாங்கமுடியாத குளிர் இருப்பதில்லை. இந்த நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், இங்குள்ள தஸ்தூரி கார் பூங்கா வரைதான் நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்லலாம். அதன்பின் இந்த அற்புதமான சிறிய மலை நகரத்தை அடைய 40 நிமிடங்கள் நடக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு நடப்பது சிரமமாக இருக்கிறதா, நீங்கள் குதிரை முதுகில் சவாரி செய்யலாம். அல்லது நேரல் சந்திப்பிலிருந்து மாத்தேரன் வரை குறுகிய பாதை ரயில் பயணமான பொம்மை ரயில் பயணம் மேற்கொள்ளலாம்.

Book Your Flight to Mumbai

எனவே இந்த குளிர்கால பனியைத் தொலைக்க நீங்கள் எங்கு செல்லவிருக்கிறீர்கள்?